• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எல்லையை தாண்டியதால் கர்ப்பிணி பசுவிற்கு மரண தண்டனை விதித்த ஐரோப்பிய நாடு

June 6, 2018 தண்டோரா குழு

எல்லையை தாண்டிய காரணத்தினால் கர்ப்பிணி பசுவிற்கு மரண தண்டனை விதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாட்டின் ஆணைய வழிகாட்டுதலின் படி பக்கத்து நாட்டிற்கு செல்லவேண்டும் என்றால் அதற்குரிய ஆவணம் இருக்க வேண்டும்.அவ்வாறு ஆவணம் இல்லாமல் அந்த நாட்டு எல்லையை தாண்டினால் மரண தண்டனை விதிக்கப்படும்.இந்த நடைமுறை தான் அந்த நாட்டில் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்று பல்கேரியா,இந்த நாட்டில் கொபிலோவ்ட்சி என்கின்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரலம்பியேவ்.இவர் ஏராளமான பசுக்கள் வளர்க்கிறார்.இந்நிலையில் அவரது பசுகள் மேய்ச்சலுக்காக சென்றது, அவரது பசுகளில் ஒன்றான பென்கா கர்ப்பமாக இருந்தது.அந்த பசு மேய்ந்துகொண்டே பல்கேரிய எல்லையை தாண்டி ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத செர்பியா என்கின்ற நாட்டிற்குள் நுழைந்தது.

இதனால் எல்லையை தாண்டிய கர்ப்பிணி பசுவிற்கு ஐரோப்பிய அதிகாரிகள் மரண தண்டனையை விதித்துள்ளனர். கர்ப்பிணி பசுவிற்கு மரண தண்டனை விதித்ததால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும் படிக்க