May 5, 2018
தண்டோரா குழு
எர்ணாகுளத்தில் 58 மையங்களில் 33,160 பேர் நீட் தேர்வு எழுதவுள்ளனர்.எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுதும் 5,000 மாணவர்கள் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களாவர் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மேலும்,எர்ணாகுளத்தில் நீட் தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்ட உதவி மையங்களில் தமிழ்பேசும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எர்ணாகுளம் வரும் தமிழக மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் தயாராக உள்ளதாக எர்ணாகுளம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.தங்கும் விடுதி மற்றும் உணவு போன்றவற்றில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.