• Download mobile app
26 May 2025, MondayEdition - 3393
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு ரூ.69 லட்சம் 30 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது – சிண்டிகேட் வங்கி

February 18, 2020

இந்தியாவில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு ரூ.69 லட்சத்து 30 ஆயிரம் கோடி கடன் தேவை இருப்பதாகவும், அதில் ரூ. 10 லட்சத்து 30 ஆயிரம் கோடியை மட்டுமே வங்கிகள் வழங்கியுள்ளதாகவும் சிண்டிக்கேட் வங்கியின் எம்.எஸ்.எம்.இ துறை பொது மேலாளர் சிவகுரு தெரிவித்துள்ளார்.

சிண்டிகேட் வங்கி சார்பில் சிறு குறு நிறுவனங்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை வெரைட்டி ஹால் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் மற்றும் வங்கியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், கோவை மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் கார்த்திகை வாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் சிண்டிக்கேட் வங்கியின் எம்.எஸ்.எம்.இ துறை பொது மேலாளர் சிவகுரு பேசியதாவது:

இந்தியாவில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு ரூ.69 லட்சத்து 30 ஆயிரம் கோடி கடன் தேவை இருக்கிறது. அதில் ரூ. 10 லட்சத்து 30 ஆயிரம் கோடியை மட்டுமே வங்கிகள் வழங்கியுள்ளன. மற்ற 84 சதவீத தேவைகளை அந்த தொழில் முனைவோர் அல்லது மற்ற சிறு நிதி நிறுவனங்கள் தான் வழங்கியுள்ளன. பலர் கந்துவட்டிக்கு பணம் வாங்கி தொழில் நடத்தும் நிலை உள்ளது. வங்கிகள் கடன் வழங்குவதற்கு பல லட்சம் கோடிகள் உள்ளன.எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு கடன் வழங்கவும் அவர்களை மேம்படுத்துவதற்காக எனவே 270 கிளைகளை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியுள்ளோம். அதில் கோவையில் மட்டும் நான்கு கிளைகள் உள்ளன. இந்த சிறப்பு கிளைகளில் உள்ள மேலாளர்களுக்கு தொழில் முனைவோர்களுக்கு எந்த விதத்தில் கடன் கடன் வழங்குவது என்பது போன்ற சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். கடந்த டிசம்பர் வரை மட்டும் ரூ.8300 கோடி கடன்களை மறு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளோம். இந்தியா முழுவதும் எங்களுக்கு 4060 வங்கிக் கிளைகள் உள்ளன.
எம்எஸ்எம்இ நிறுவனங்கள் இந்தியாவின் ஜிடிபியில் 31 சதவீதத்தை கொடுக்கின்றன. ஏற்றுமதியில் 45 சதவீதத்தை கொடுக்கின்றன. இந்தியா முழுவதும் 1.58 கோடி எம்எஸ்எம்இ நிறுவனங்கள் உள்ளன. இதில் 82 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் 12.4 கோடி வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. இந்த எம்எஸ்எம்இ நிறுவனங்களில் 14 சதவிகிதம் பெண்கள் நிர்ணயிப்பவை. இதில் 59 சதவீதம் கிராமப்புற பகுதிகளில் உள்ளன. கடந்த நவம்பர் மாதம் வரை எங்களது வங்கி ரூ.28 ஆயிரத்து 917 கோடி கடனை எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளது. அதில் ரூ.1457 கோடி தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் ரூ.450 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதனை ரூ.ஆயிரம் கோடியாக மாற்ற வேண்டும் என்று கிளை மேலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். எனவே அனைத்து எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கும் துரிதமாக கடன் கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, தொழில் முனைவோரகளின் சந்தேகங்களை பூர்த்தி செய்யும் விதமாக கேள்வி நேரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சிண்டிகேட் வங்கியின் ஜோனல் மேனேஜர் ஜகதீசன், ரீஜனல் மேனேஜர் சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க