June 27, 2018
தண்டோரா குழு
எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3ஆவது நீதிபதியாக சத்தியநாராயணனை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பான வழக்கை,சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைப்பெற்றது.
அதில்,3-வது நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டை தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் திரும்பப்பெற வேண்டும் என்றும் எந்தவொரு நீதிபதி மீதும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது சரியாக இருக்காது அதுபோன்ற குற்றச்சாட்டுகளுடன் மனு தாக்கல் செய்வது சரியில்லை எனவும் கூறியுள்ளது.
மேலும்,இந்த வழக்கில் விமலாவுக்கு பதில் எம்.சத்யநாராயணா விசாரிக்க உச்ச நீத்திமன்றம் உத்தரவிட்டுள்ளது.உச்ச நீதிமன்றமே வழக்கை விசாரிக்க கோரிய டிடிவி தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.