July 12, 2018
தண்டோரா குழு
அகில இந்திய அளவில் எம்பிபிஎஸ்,பிடிஎஸ் படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடர்பான அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு,ஜூலை 16, 17 மற்றும் 18ம் தேதிகளில் நடக்க இருந்தது.இந்நிலையில் தமிழில் நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு இருந்தது.மேலும் இரண்டு வாரத்திற்குள் புதிய தரவரிசை பட்டியலை வெளியிடவும் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் 2ம்கட்ட மருத்துவ கலந்தாய்வை நிறுத்தி வைக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.