December 26, 2025
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் அதிமுகவில் தீவிரமாக பணியாற்றி வந்தவர் இன்ஜினியர் சந்திரசேகர்.வடவள்ளி மற்றும் கோவை வடக்கு தொகுதி பொதுமக்கள் மத்தியில் எளிதில் அணுகும் நபராக மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பவராக செயல்பட்டு வந்தார்.
அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு அரசு திட்ட பணியை செய்வதற்கு உதவியாக இருந்து வந்தார்.இவர் புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராகவும் பின்னர் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளராக பதவி உயர்வு பெற்று பணி செய்து வந்தார்.
கடந்த ஆண்டு இவர் கட்சியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் இவர் கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி முன்னிலையில் மீண்டும் கட்சியில் இணைந்து அவரிடம் வாழ்த்து பெற்றார்.
அப்போது எம்எல்ஏக்கள் அம்மன் அர்ஜுனன், பிஆர்ஜி அருண்குமார் உள்பட பல்வேறு நிர்வாகிகள் இன்ஜினியர் சந்திரசேகருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஏற்கனவே இருந்த பதவியில் அவர் தொடர்ந்து நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இன்ஜினியர் சந்திரசேகர் அதிமுகவில் தீவிரமாக பணியாற்றுவார் என அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.ஒரு ஆண்டுக்குப் பிறகு எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் இன்ஜினியர் சந்திரசேகர் மீண்டும் பொறுப்புக்கு திரும்பியது அதிமுக வட்டாரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.