May 4, 2018
தண்டோரா குழு
சென்னை அண்ணா பலக்லைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும், எம்ஐடி கல்லூரியின் ஹெலிகாப்டர் சோதனை பைலட் மற்றும் ஆளில்லா விமான அமைப்பின் ஆலோசகராக நடிகர் அஜித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ்லாந்தில் ஆளில்லா விமானம் தொடர்பான மெடிக்கல் எக்ஸ்பிரஸ்- 2018 யுஏவி சேலஞ்ச் போட்டியின் இறுதிச் சுற்று வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.இப்போட்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த போட்டிக்காக எம்ஐடி மாணவர்கள் நவீன ஆளில்லா விமானம் ஒன்றை உருவாக்கி வருகின்றனர்.இந்நிலையில், மெடிக்கல் எக்ஸ்பிரஸ்- 2018 யுஏவி சேலஞ்சில் கலந்துக் கொள்ளும் குழுவுக்கு உதவியாக நடிகர் அஜீத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.