February 6, 2018
தண்டோரா குழு
முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற ஆசை தனக்கு இல்லை என்றும், தகுதி நீக்கத்திற்கு ஆளான எம்.எல்.ஏக்கள் 18 பேரில் ஒருவரை முதலமைச்சராக்குவதே தனது திட்டம் என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சிக்கு எதிராக போராடி வரும் மக்களை சந்தித்து அவர் ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்டா மாவட்டங்களில் வைரமே கிடைத்தாலும் கூட, அங்கு விவசாயம் மட்டுமே நடைபெற வேண்டும். கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. வெளியேற வேண்டும் என்றும் தேவைப்பட்டால் கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார்.
மேலும்,எனக்கு முதலமைச்சர் பதவி மீது ஆசையில்லை.நான் கூறும் 6 அமைச்சர்களை நீக்கிவிட்டு எங்களுடன் இணைந்தால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 18 பேரில் ஒருவரை முதல்வராக்குவேன் என்றும் அவர் கூறினார்.