August 14, 2021
தண்டோரா குழு
முன்னாள் அமைச்சரும், கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி. வேலுமணி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
சமீபத்தில் திமுக அரசால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பொய் வழக்கு போடப்பட்டு, என், என் உறவினர்கள் வீடு, சம்மந்தமில்லாதவர்கள் வீடுகளில் காவல்துறையை ஏவி சோதனை செய்தபோது தனக்கு உறுதுணையாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், அனைத்து எம்.எல்.ஏ.க்கள், கோவை மாவட்ட மக்கள் என்னை சகோதரனாக பாவித்து உறுதுணையாக இருந்த, ஆறுதல் வழங்கிய கழக தோழர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.
மேலும், கோவையில் 10 சட்டமன்ற தொகுதியையும் அதிமுக கைப்பற்றியதாகவும்,
தான் அமைச்சரான பிறகு, 50 ஆண்டுகால இல்லாத வளர்ச்சியை தந்தததால், மக்கள் இந்த அளவிற்கு ஆதரவு அளித்ததாகவும் குறிப்பிட்டார். சோதனையில், 13 லட்சம் பிடித்ததாக சொன்னது தவறு என்றும், தன் வீட்டிலோ, உறவினர் வீட்டிலோ எதுவும் எடுக்கவில்லை என்றும், அதேபோல், வங்கி கணிக்கும் முடக்கவில்லை என்றார்.
நீதிபதிகளை நம்புவதாகவும், தன் மீதான வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்றவர்,
100க்கும் மேற்பட்ட விருதுகள், கிராம சாலைகள், அதிகமான வீடுகள், கூட்டுக்குடிநீர் திட்டங்களை அமைச்சராக இருந்தபோது செய்துள்ளதாக சுட்டிக்காட்டியவர்,ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக ஆட்சி தொடர தான் முக்கிய காரணம் என்பதால் திமுகவும், திமுக தலைவரும் தன் மீது கோபத்தால் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.