• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என்.டி.சி ஆலைகளை முழுமையாக இயக்கி முழு சம்பளத்தை வழங்க கோரி பெண் தொழிலாளர்கள் மனு

March 7, 2022 தண்டோரா குழு

கடந்த 2020ல் கொரோனா காரணமாக என்.டி.சி ஆலைகள் மூடப்பட்டது.அதனால் ஊழியர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் என். டி.சி ஆலைகளை முழுமையாக இயக்கி முழுமையான சம்பளத்தை தர கோரி பல்வேறு என்.டி.சி ஆலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் சுமார் 20க்கும் மேற்ப்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனு அளிக்க வந்தவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர்.கடந்த 2 ஆண்டுகளாக பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் மிகவும் சீர்குலைந்து உள்ளதாகவும் எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக தங்கள் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

இதன் காரணமாக சுமார் 500க்கும் மேற்பட்டோர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க