• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என் கடைசி டி-20 போட்டி சென்னையில் தான் நடைபெறும் – தோனி !

November 20, 2021 தண்டோரா குழு

சென்னை கலைவாணர் அரங்கில்
2021ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி உள்ளிட்ட சி.எஸ்.கே வீரர்களும்
கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தோனியின் எண் (7) அச்சிடப்பட்ட சி.எஸ்.கே. ஜெர்ஸி பரிசு அளிக்கப்பட்டது.

விழாவில் பேசிய தோனி,

சென்னை மிகச் சிறந்த நினைவுகளை கொடுத்துள்ளது; தமிழ்நாடு எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது.மாற்று அணி வீரர்களையும் சென்னை ரசிகர்களை உற்சாகபடுத்துவார்கள்,அதுதான் அவர்களது சிறப்பு.சிஎஸ்கே சரியாக செயல்படாத போதும் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தார்கள். சிஎஸ்கே அணியை உற்சாகப்படுத்தி ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. “என்னுடைய கடைசி டி20 போட்டி சென்னையில்தான் என்று நம்புகிறேன்!” என்றார்.

மேலும் படிக்க