• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என் ஓட்டு கோவிலை விடுவிப்பவருக்கே! – சத்குரு

April 4, 2021 தண்டோரா குழு

கோவில் அடிமை நிறுத்து இயக்கத்தை ஆதரித்து பொது மக்கள் பலர் இன்று (04-04-2021) ட்விட்டரில் பல்வேறு பதிவுகளை பகிர்ந்தனர். அது தேசிய அளவில் டிரண்டிங்கில் முதல் இடம் பிடித்தது.

சமூக வலைத்தளங்கள் மக்களின் விருப்பங்களையும், கருத்துகளையும் பதிவு செய்யும் களமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று ட்விட்டரில் பொது மக்கள் பலரும் இவ்வியகத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவில்அடிமைநிறுத்து (#FreeTNTemples & #PeopleHaveSpoken) என்ற ஹாஷ்டேகுகளை டிரெண்ட் செய்தனர். இது தேசிய அளவில் முதலிடம் பிடித்தது. இலட்சகணக்கான மக்கள் தொடர்ந்து அவர்களின் வேதனைகளையும், உணர்வுகளையும் பதிவு செய்து வந்தனர்.

இவ்வியக்கம் தொடர்பாக சத்குரு ட்விட்டரில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் “3 கோடி மக்கள் தங்களுக்கு நியாயப்படி சொந்தமானதை ஆணித்தரமாக கேட்டுள்ளனர். நம் தமிழ் கோவில்களை காத்து, புனரமைப்போம். அரசியலமைப்புச் சட்டப்படி என் உரிமையை எனக்கு மீட்டுக்கொடுத்து, கோவில்களை விடுவிப்பவருக்கே என் ஓட்டு.” என்று குறிபிட்டுள்ளார்.

மேலும் வீடியோ பதிவில் அவர் “தமிழ் மண்ணில் பிறந்த அனைவரும் கோவில்களை விடுதலை செய்ய உறுதி ஏற்க வேண்டும். நம் கோவில்கள் அனைத்தும் உயிரோட்டமாகவும், மகத்தான கொண்டாட்டமாகவும், நம்முடைய ஆன்மீகத்திற்கும், முக்திக்கும் ஒரு வழியாக உருவாக்கிட வேண்டும்.

கோவில்களை அரசு அருங்காட்சியகம் போல நடத்த முடியாது, கோவில்கள் உயிரோட்டமாக இருக்க வேண்டும். திராவிட பெருமையான இந்த தமிழ் கோவில்கள் திருப்பி முழுமையான, வைபவமான நிலைக்கு வர வேண்டுமென்றால், அவை அரசாங்கத்தின் கரங்களில் இருந்து பக்தர்களின் கரங்களுக்கு வர வேண்டும்.

இது குறித்து 3 கோடி மக்கள் பேசி இருக்கிறார்கள். இப்பொழுதாவது அரசியல் கட்சிகள் யாராக இந்தாலும் இதை கவனிக்க வேண்டும். மேலும் இது குறித்து ஒரு படி எடுக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

தமிழக கோவில்களை அரசிடமிருந்து விடுவிக்க வலியுறுத்தி சத்குரு “கோவில் அடிமை நிறுத்து” எனும் இயக்கத்தை துவங்கினார். இதற்காக அழியும் நிலையில் இருக்கும் நூற்றுக்கணக்கான கோவில்களின் அவல நிலை குறித்த வீடியோக்களையும் அவர் ட்விட்டரில் வெளியிட்டார்.

கோவில்களை பக்தர்கள் நிர்வகிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. தற்போது சத்குருவின் கோவில் அடிமை இயக்கம் அதற்கு பெருமளவில் வலு சேர்த்துள்ளது. தற்போது இக்கோரிக்கை பெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது.

பல்வேறு சினிமா பிரபலங்களும், அரசியல், வர்த்தகம் போன்ற துறைகளைச் சேர்ந்த பல முக்கிய நபர்களும் இவ்வியகத்திற்கு ஆதரவு அளித்திருந்தனர்.

இவ்வியக்கத்திற்கு ஆதரவாக மிஸ்டு கால்கள் மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் இதுவரை 3 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்களின் ஆதரவினை தெரிவித்ததை குறிப்பிட்டு, சத்குரு அவர்கள் முதல்வருக்கும், எதிர்கட்சித் தலைவருக்கும் கோவில்களை விடுவிக்க உடனடியாக செயல்பட வேண்டும் என்று கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க