• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என்மீது தவறு இருந்தால் எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன்: டிஐஜி ரூபா

July 14, 2017 தண்டோரா குழு

சசிகலா விவகாரத்தில் என் மீது தவறு இருந்தால் எந்த விசாரணைக்கு தயாராக இருக்கிறேன் என பெங்களூரு சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா கூறியுள்ளார்.

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் செய்து கொடுத்ததற்கு ரூ. 2 கோடி வரை லஞ்சம் பெற்றதாக கர்நாடக முன்னாள் சிறைத்துறை டி.ஜி.பி.சத்திய நாராயணா மீது டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாற்றினார்.

இதற்கிடையில், கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் டி.ஐ.ஜி. ரூபா ஊடகங்களுக்கு தொடர்ந்து பேட்டி அளித்து வருவது பணி விதிகளுக்கு விரோதமானது என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த டி.ஐ.ஜி. ரூபா,

சசிகலாவுக்கு சிறையில் சலுகை அளிப்பது குறித்த அறிக்கையில் நான் உறுதியாக உள்ளேன்.சசிகலாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறுவதால் எனக்கு எந்த லாபமும் இல்லை.

இந்த விவகாரத்தில் என்னை குறிவைப்பதில் எந்த நியாயமும் இல்லை. என் மீது தவறு இருந்தால் எந்த விசாரணைக்கும் நான் தயாராக உள்ளேன் என்றார்.

மேலும், டிஜிபிக்கு அளித்த புகார் குறித்து மீடியாக்களிடம் பேசவில்லை. நிரூபர்களை சந்தித்ததால் நடவடிக்கை எடுத்தாலும் எனக்கு கவலை இல்லை. சசி அறையில் இருந்த டிவி, மின்விசிறி இருந்த படக்காட்சிகள் பற்றி எனக்கு தெரியாது. உண்மையை வெளிப்படுத்தியதால் உயர் அதிகாரிகள் எனக்கு தொந்தரவு கொடுக்கின்றனர் என ரூபா கூறினார்.

மேலும் படிக்க