June 30, 2018 
தண்டோரா குழு
                                என்னை மிகவும் பாதித்த நூல், “பூணூல் அதனாலேயே அதை தவிர்த்தேன் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.  
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன் டிவிட்டர் நேரலையில் மக்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து வணக்கம் டுவிட்டர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். எனினும் பலர் #AskKamalHaasan என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டுவிட்டரில் கமலிடம் கேள்வி கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தங்க தமிழ்மகன் என்பவர் நீங்கள் படித்த நூலில் உங்களை மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது கமல்ஹாசன் ஐயா? என கமலிடம் கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், “பூணூல் “ அதனாலேயே அதை தவிர்த்தேன்.