• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

என்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது – கமல் எச்சரிக்கை

May 17, 2019 தண்டோரா குழு

என்னை கைது பண்ணட்டும் எனக்கு ஒன்றும் இல்லை ஆனால் கைது செய்தால் இன்னும் பதற்றம் அதிகரிக்கும்என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை விமானத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

நான் சொன்னதில் தவறான கருத்துரை ஒன்றும் கிடையாது. பல வருடங்களாக சொல்லப்பட்டது ஆனால் இப்போது இது ஒரு காரணத்திற்காக கவனிக்கப்படுகிறது. இதே பரப்புரையை மெரினாவில் 15 நாட்களுக்கு முன்பு சொல்லியிருக்கிறேன். மெரினாவில் பேசிய கருத்தை தான், மீண்டும் பேசினேன். ஆனால் அது தேர்தலுக்காக பெரிதுப்படுத்தப்படுகிறது. அப்போது நம்பிக்கையுடன் இருந்தவர்கள் இப்போது நம்பிக்கை குறைந்தவுடன் விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.நான் எதையும் உருவாக்கவில்லை அவர்களாகவே உருவாக்கி விட்டிருக்கிறார்கள்.

மோடி அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை, சரித்திரம் பதில் சொல்லும். பிரதமர் மோடி அபார ஞானம் உள்ளவர் என்று பலரும் நினைத்து கொண்டிருப்பதால், அவருக்கு பதில் சொல்ல சரித்திர ஆசிரியர்கள் உள்ளனர். நாங்கள் அமைதியை காக்க எல்லா நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறோம். நான் கைதுக்கு பயப்படவில்லை பரப்புரை இருக்கிறது அதை செய்ய ஆவல்தான். என்னை கைது பண்ணட்டும் எனக்கு ஒன்றும் இல்லை ஆனால் கைது செய்தால் இன்னும் பதற்றம் அதிகரிக்கும் எனவே என்னயுடைய வேண்டுகோள் இல்லை அறிவுரை அதை செய்யாமல் இருப்பது நல்லது.

சூலூரில் பதற்றம் நீடிக்கும் பட்சத்தில் ஏன் அங்கு தேர்தலை ரத்து செய்யக் கூடாது. நேற்றை பிரச்சாரக்கூட்டத்தில் பிரச்சாரம் உருவாகவில்லை, உருவாக்கப்படுகிறது. தீவிரவாதம் எல்லா மதங்களிலும் உள்ளது. அதை தான் வரலாறு கூறுகிறது. என் நாக்கை அறுக்க வேண்டும் என்ற ராஜேந்திர பாலாஜியின் கருத்து அவரின் உண்மையான குணத்தை காட்டுகிறது. இந்துக்கள் யார், ஆர்.எஸ்.எஸ் யார் என்பதை பிரித்து பார்க்க வேண்டும். அரசியல் குறுக்கீட்டால் சூலூர் பிரச்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க