• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என்னிடம் வாங்கிய ரூ.10 கோடி பணத்தை கமல்ஹாசன் திருப்பித் தரவில்லை – ஞானவேல் ராஜா

September 26, 2019 தண்டோரா குழு

தன்னிடம் வாங்கிய ரூ.10 கோடி பணத்தை கமல்ஹாசன் திருப்பித் தரவில்லை என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா புகார் அளித்துள்ளார்.

கடந்த 2015 – ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான உத்தமவில்லன் படம் வெளியாவதில் சில சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கமல்ஹாசன் தம்மை அணுகியதாகவும், தமது தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாகக் கூறி, முன்பணமாக 10 கோடி ரூபாயை கேட்டு பெற்றதாகவும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திடம் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார். மேலும், நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை தமது படத்தில் நடிக்க அவர் முன்வரவில்லை என்றும், 10 கோடி ரூபாய் பணத்தை திருப்பித் தரவில்லை என்றும் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார்

இதையடுத்து, புகார் தொடர்பாக விளக்கம் கேட்டு கமல்ஹாசனுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், ஞானவேல் ராஜா புகாருக்கு விளக்கமளித்துள்ள கமல் தரப்பு, லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெற்றது என்றும் ஞானவேல் ராஜாவிடம் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க