September 2, 2025
தண்டோரா குழு
சந்தையில் கிடைக்கும் ஊட்டச்சத்துப் பொருட்களின் பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் குறித்து நுகர்வோர் மத்தியில் கவலைகள் அதிகரித்து வருகின்றன.
இந்தக் கவலையைப் போக்கும் வகையில், ஆரோக்கியத்துக்கும் நல்வாழ்வுக்கும் ஆதரவளித்துவரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஆம்வே இந்தியாவின் முதன்மை பிராண்டான நியூட்ரிலைட்டின் முக்கிய சப்ளிமெண்டுகள் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு வீரர்களுக்கான ஊட்டச்சத்து சப்ளிமெண்டேஷன் சோதனை அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாக ஆம்வே அறிவிக்கிறது.
இந்த அங்கீகாரம் இந்த நிறுவனத்தின் பெருமைக்குரிய நம்பகத்தன்மை சான்றளிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. உயர்தரமும் பாதுகாப்பும் மிக்க அறிவியல் ரீதியாக ஆதரிக்கப்பட்ட ஊட்டச்சத்து தயாரிப்புகளை வழங்குவதில் ஆம்வேக்கு இருக்கும் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை இந்த அங்கீகாரம் வலிமைப்படுத்துகிறது. பின்வரும் ஐந்து முக்கிய தயாரிப்புகள் அங்கீகரிக்க்கபப்ட்டுள்ளன:
நியூட்ரிலைட் ஆல் பிளான்ட் புரோட்டீன், நியூட்ரிலைட் கால் மேக் டி பிளஸ் கே2, நியூட்ரிலைட் குளுகோசாமைன் எச்சிஎல் வித் போஸ்வெலியா, நியூட்ரிலைட் சால்மன் ஒமேகா 3 சாஃப்ட்ஜெல்ஸ் மற்றும் நியூட்ரிலைட் டெய்லி பிளஸ் ஆகியவை சர்வதேச ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் நிர்ணயித்துள்ள உலக அளவிலான தரநிலைகளுக்கு இணங்குகின்றன. இந்தத் தயாரிப்புகள் பாதுகாப்பற்ற பொருட்கள் உள்ளனவா என்று சுதந்திரமாக சரிபார்க்கப்படுகின்றன.இது விளையாட்டு ஊட்டச்சத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது.
இந்தச் சாதனைக் கட்டத்தைப் பற்றி ஆம்வே இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ரஜ்னீஷ் சோப்ரா கருத்து தெரிவிக்கும் போது, “
ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்களின் பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் குறித்த பேச்சுகள் வேகம் பெற்று வரும் இந்த வேளையில் இந்த அங்கீகாரம் எங்கள் 90 ஆண்டுகால பாரம்பரிய பிராண்டான நியூட்ரிலைட் மீதான பார்வையையும் நம்பிக்கையையும் வலுப்படுத்த உதவுகிறது. நிரூபிக்கப்பட்ட தரத்தை நாடும் விளையாட்டு வீரர்களுக்கும் உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கும் ஏற்றது என்ற நிலையை விரிவுபடுத்தும் அதே வேளையில் நம்பகமான குடும்ப பிராண்ட் என்ற எண்ணத்தை இது மேலும் வலிமைப்படுத்துகிறது.
தரம், பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு ஆம்வே எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது. சிறந்த வாழ்க்கையை வாழ மக்களுக்கு உதவும் எங்கள் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப நாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் இந்த நோக்கத்தை பிரதிபலிக்கிறது என்பதை நாங்கள் எப்போதும் உறுதிசெய்துள்ளோம். உலகில் விற்பனையாகும் வைட்டமின்கள் மற்றும் உணவு சப்ளிமெண்ட்களின் நம்பர் #1 பிராண்டான நியூட்ரிலைட்டின் ஆதரவுடன் ஊட்டச்சத்து துறையில் எங்கள் பல்லாண்டு கால நிபுணத்துவம் முழுமையாக நல்வாழ்வை ஆதரிக்கும் நம்பகமான ஊட்டச்சத்து தயாரிப்புகளை வழங்குவதற்கான எங்கள் நீண்டகால உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.
நியூட்ரிலைட் தயாரிப்புகள் பாரம்பரியமாக அனைத்து வயதுடைய தனிநபர் மற்றும் குடும்ப ஆரோக்கியத்தை ஆதரிப்பதில் கவனம் செலுத்துகின்றன. 800 க்கும் மேற்பட்ட அறிவியல் அறிஞர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட எங்கள் உலகளாவிய குடும்பம் உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளை உங்களுக்கு உருவாக்கி வழங்க இடைவிடாமல் உழைக்கிறது மற்றும் ஆண்டுக்கு 5,00,000 க்கும் மேற்பட்ட தரப் பரிசோதனைகளை செய்கிறது.
என்எஃப்எஸ்யு-வின் இந்த அங்கீகாரம் அந்த அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். மேலும் அது எங்கள் தயாரிப்புகளை புதிய தரநிலைகளுக்கு உயர்த்துகிறது.” என்று கூறினார்.