June 13, 2018
தண்டோரா குழு
எனது உடல் ஃபிட்னஸை விட கர்நாடக மாநில வளர்ச்சியில் ஃபிட்னஸ் தான் முக்கியம் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இந்தியர்கள் தங்கள் உடலை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி தாங்கள் செய்யும் உடற்பயிற்சியை வீடியோவாக வெளியிடும்படி வலியுறுத்தினார்.மேலும்,இந்த சேலஞ்சை முன்னெடுக்கும் படி விராட் கோலி,சாய்னா நெஹ்வால்,ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோருக்கு பரிந்துரை செய்தார்.
இதனையடுத்து கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான் புஸ்அப்ஸ் எடுக்கும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து அவரது மனைவி அனுஷ்கா சர்மா பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சாய்னா நேவால் ஆகியோருக்கு பிட்நெஸ் சவாலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதனைத்தொடர்ந்து விராத் கோலியின் சவாலை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி பஞ்சபூத உடற்பயிற்சி செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ளார்.மேலும்,அவர் இந்த சவாலை கர்நாடக முதல்வர் குமாரசாமி,இந்திய டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா மற்றும் 40 வயதைக் கடந்த ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் இந்த பிட்னஸ் சவாலை விடுத்துள்ளார்.
தற்போது, மோடியின் சவாலிற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி பதில் கூறியுள்ளார்…! அதில்,
“எனது உடல்நலனில் அக்கறை கொண்ட தங்களுக்கு மிகவும் நன்றி;எனது உடல் ஃபிட்னஸை விட கர்நாடக மாநில வளர்ச்சியின் ஃபிட்னஸ் குறித்தே அதிக அக்கறை கொள்கிறேன்.அதற்கு உங்கள் ஆதரவு தேவை என்று பதில் அளித்துள்ளார்”.