February 24, 2018
தண்டோரா குழு
எனது அரசியல் வாழ்வில் முக்கிய முடிவினை வரும் 28 ஆம் தேதி அறிவிக்க உள்ளேன் என்று நடிகர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
நடிகர் டி. ராஜேந்தர் கடந்த 2004ம் ஆண்டு, திமுகவில் இருந்து விலகி அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை துவங்கினார். பின்னர் 2013ம் ஆண்டு அக்கட்சியை கலைத்து விட்டு மீண்டும் திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில், வரும் 28 ஆம் தேதி எனது அரசியல் வாழ்வில் முக்கிய முடிவினை அறிவிக்க உள்ளேன் என்றும், இவ்வளவு நாட்களாக சத்ரியனாக பார்த்த என்னை சாணக்கியனாக பார்க்க போகிறீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,சிம்புவுக்கு நான் ஃபாதர் என்றால் சிம்பு ரசிகர்களுக்கு நான் காட் ஃபாதர். சினிமாவை விட அரசியல் சவாலானது என்பதால் சிம்புவை அரசியலில் விட விரும்பவில்லை என கூறியுள்ளார்.