March 20, 2021
தண்டோரா குழு
கோவை பீளமேடு, ரொட்டிக் கடை மைதானத்தில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் டாக்டர் மகேந்திரனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
விவசாயம் விஞ்ஞானிகள் கையில் கொடுக்க வேண்டும், வியாபாரிகளின் கையில் கொடுக்ககூடாது.தேர்தல் அறிக்கை மக்களுக்குகாக எழுதப்பட்டது. அதில் தவறு இருந்தால் நீங்கள் தான் திருத்த வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொண்டார்.மேலும் திருடாமல் வாழ தெரிந்தவர்கள் தான், ம.நீ.ம கட்சியில் இருப்பவர்கள்.என் கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என உத்திரவாதம் கொடுக்க முடியாது. தவறு செய்வர்கள் மீது என்னால் நடவடிக்கை எடுக்க முடியும். அதை ஒப்புக்கொண்டு தான் ம.நீ.ம அனைவரும் இருக்கிறார்கள். நான் பேசும்போது தனிமனித தாக்குதல் செய்கிறேன் என்கிறார்கள்.வேண்டுமானல் மாண்புமிகு போட்டுக்கொள்கிறேன் என்றார்.
மேலும், ஊழல்வாதிகளை பற்றி எப்படி பேசமால் இருக்க முடியும், நீங்கள் வேண்டுமானால் இருக்கலாம், நான் அப்படியில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டும் நான், மக்களின் பிரதிநிதி கிடையாது.உண்மையாகவே நான் மக்கள் பிரதிநிதி தான்.மக்கள் பிரச்சினை எதிர்த்து குரல் கொடுப்போம்.பொது சொத்துகளை அடித்து நொறுக்கு என்றும் சொல்லும் தலைவர், தலைவனே கிடையாது.
ஒரு பஞ்சாயத்து தலைவர் என்ன வேண்டுமானால் செய்ய முடியும்.சட்டமன்ற உறுப்பினரின் பவர் முக்கியமானது.ஆனால் அதை யாரும் உபயோகிப்பதில்லை,நான் சினிமாவில் எழுதிய வசனம், சிவாஜி கணேசன் பேசினார்.பஞ்சாய்த்துக்கு மேல என்ன?? கோர்ட்டு, சுப்புரீம் கோர்டு என்று வசனத்தை தேவர் மகன் படத்தில் எழுதினேன். இன்றும் அதைதான் சொல்கிறேன் என்றார்.
நேர்மை தோற்கும் என்பவர்களை பார்த்தால் எனக்கு கோபம் வருகிறது. தேர்தலின் போது 5 ஆயிரம், 10 ஆயிரம் பணத்தை வாங்கி ஏமாந்து விடாதீர்கள், பிறகு 5 வருடம் கஷ்டப்படுவீர்கள். இங்கு, குடிக்க தண்ணீர் எந்த ஊரிலும் இல்லை அதேபோன்ற ஆரம்ப பள்ளிகள் சரியாக இல்லை ஆனால்மாண்புமிகு எஸ்.பி வேலுமணி குடிக்கின்ற தண்ணீரை மக்களுக்கு கொடுப்பதற்கு சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளார்.
உபயோகிக்கும் தண்ணீருக்கு மீட்டர் வைத்து காசு கட்டனும் என்கிறார்கள். குடிநீர், உணவு, கல்வி மக்களின் உரிமை எனவும் மக்களுக்கு தேவையான திட்டங்களை பெறுவது, மக்களின் உரிமை. சட்டமன்ற கூட்டத்தொடரை நேரலையாக பார்த்தால், இந்த கோமாளிகள் இப்படியாக நடந்து கொள்கிறார்கள் என்று மக்களுக்கு தெரியும். எனவே நேரலை செய்ய வேண்டும் என ம.நீ.ம நிர்வாகிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மேலும் குற்றவாளிகளை ஒருமையில் தான் பேசுவேன். அந்த அவமானத்தை அவர்கள் ஏற்றுதான் ஆக வேண்டும்.மறதி தேசிய வியாதி, என நான் எழுத காரணம், மாணவர்களை பேருந்தில் வைத்து எரித்தார்களே மறந்துவிட்டோம்.அப்போது கீழே இருந்த சிலர் சதிலீலாவதி திரைப்படத்த்தில் பேசியது போன்று கொங்கு பாசையில் பேசுமாறு கேட்டனர். ஆனால் அதற்கு கமல் நான் இங்கு நடிக்க வரவில்லை என்றார். அவர்கள் என் ரசிகர்கள் என்றார் பின்பு நடிக்க சொல்லியும், ஆடச்சொல்லியும், பாட சொல்லியும் கேட்காதீர்கள், அதற்காக நான் இங்கு வரவில்லை.அப்படியென்றால் டிக்கெட் வாங்குங்கள். இல்லை என்றால் டியூப்பில் பாருங்கள் என்றார். பின்பு உங்களுக்கு புரியும் மக்களுக்காக எஞ்சிய ஆயுளை அரசியலில் என்னை அர்பனித்து உள்ளேன்.ஆனால் எனக்கு சாயம் பூச பார்க்கிறார்கள், எந்த சாயமும் பூச முயற்சிக்காதீர்கள். என்மீது காவியும் ஒட்டாது, கருப்பும் ஒட்டாது, மேலும் தமிழனுக்கு ரத்தத்தில் ஓடுவது ஆல்கஹால் அதை உடனே நிறுத்த முடியாது. எனவும் நிறுத்தினால் தமிழகத்தில் பல கொலைகள் விழும், மதுவில் மனரீதியாக பாதிக்கப்பட்டவர்களை முதலில் சரிசெய்ய வேண்டும், 6 மணி ஆகினால் அவர்களுக்கு ஆல்ஹாகல் பசி வந்துரும் எனவே அதை படிபடியாக சரிசெய்ய வேண்டும் என்றார்.
நாங்கள் விழித்து கொண்டது போல மக்களும் விழித்து கொண்டனர்.நான் என் மீது எந்த சாயமும் ஒட்டாது. அது காவியாக இருந்தாலும் சரி கருப்பாக இருந்தாலும் சரி. விருந்தாளிக்கு காலில் அடிப்பட்டு விட்டதாக வானதி சீனிவாசன் பழங்களை அனுப்பி வைத்தார். ஆனால் வானதி சீனிவாசன் விருந்தாளி தான் எனவும் கோவைக்கு வந்த எனக்கு விருந்தேம்பல் செய்ய வேண்டியதில்லை, ஆனால் உங்கள் தலைவர் வந்த போது Goback என்று சொல்லுறாங்களே!! என்று சாடிய கமல்ஹாசன் இராமனாதபுரத்தில் பிறந்து, பரமக்குடியில் வளர்ந்து, சென்னை, மும்பை சென்று தற்போது கோவைக்கு வந்துயிருக்கேன் எனக்கு யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று பேசி பொதுக்கூட்டத்தை நிறைவு செய்தார்.