• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எனக்கு நடந்த துரோகத்தை மறக்க மாட்டேன் – கோவையில் நடிகர் விஷால் பேட்டி !

December 15, 2022 தண்டோரா குழு

விஷால் நடிப்பில் வெளியாக உள்ள “லத்தி” திரைபடத்தின் டிரைலர் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் வெளியீடு செய்யப்பட்டது.

டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு பின் நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார்.

முதல்முறையாக கான்ஸ்டபிள் கேரக்டரில் நடித்துள்ளேன்.விவசாயிகள் பற்றி சரியான படம் யாரும் எடுத்ததில்லை. பிரச்சனையை சொல்வதை விட தீர்வு சொல்ல வேண்டும். உதயநிதி சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என முடிவெடுத்துள்ளார்.பல வருடங்களுக்கு பின்பு தனது தந்தையின் பெயரை பயன்படுத்தி உதயநிதி ஸ்டாலின் என்னும் நான் என தெரிவித்துள்ளார்.

உதயநிதி அமைச்சராகியது மகிழ்ச்சி.அரசியலில் தான் அனைவரும் உள்ளோம்.ஓ .டி. டி., சின்ன படங்களை தான் வாங்குகிறார்கள். டிஜிட்டல் படங்கள் வரும் என கமல்ஹாசன் ஏற்கனவே தெரிவித்து விட்டார்.சிறிய முதலீடை வைத்து படம் எடுப்பதை தவிர்க்கலாம். சிறிய திரைப்படங்கள் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன.மக்கள் சினிமா தியேட்டருக்கு சென்று பார்ப்பதை தான் நாங்கள் முயற்சி செய்வோம்.ஓ டி டி பிளாட்பார்ம் ஆல் சினிமா துறைக்கு பாதிப்பு வந்துள்ளது.

சினிமாத்துறைக்கு ஜிஎஸ்டி விதித்தது மிக அதிகம். சூதாட்டத்தையும் சினிமா துறையும் ஒரே இலக்காவில் வைத்துள்ளனர்.இலங்கை முகாமில் ப்ரொஜெக்டர் வைத்து இந்தப் படத்தை காட்ட கோரிக்கை வைப்பேன். அவர்களுக்கு திரையிட்டு காட்டுவதில் என்ன தவறு உள்ளது.மிஸ்கின் உடன் தயாரிப்பாளராக பிரச்சனை. எனக்கு நடந்த துரோகத்தை மறக்க மாட்டேன்.இரண்டரை மணி நேரத்தில் விவசாயியின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியாது.

இரண்டரை மணி நேரத்தில் பிரச்சினை தான் சொல்ல முடியும் தீர்வு சொல்ல முடியாது. ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் விவசாயிகளுக்கு நான் கொண்டு சேர்ப்பேன்.திருமணம் குறித்த கேள்விக்கு கட்டிடத்திற்கு பின் என்றார்.

மேலும் படிக்க