June 4, 2021
தண்டோரா குழு
அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த சசிகலா முயற்சி செய்து வருகிறார் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி கே.பழனிசாமி,
தமிழகத்தில் கொரோனா நான்கு மடங்கு அதிகரித்துள்ளதால்,பரிசோதனை மையத்தையும், பரிசோதனையின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த சசிகலா முயற்சிக்கிறார், அது நடக்காத ஒன்று. சசிகலா தற்போது அதிமுகவில் இல்லை. அவர் அமமுகவை சேர்ந்தவர்களுடன் தான் பேசி வருகிறார்.
சசிகலாவின் குடும்பத்தினர் அதிமுகவில் இருக்கக்கூடாது என்பதே கட்சியினரின் கருத்தாக உள்ளது.எனக்கும், ஓபிஎஸ்க்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை சென்னையில் புது வீட்டுக்கு இடம் பெயர்ந்த காரணத்தால் ஓ.பி.எஸ் கூட்டத்தில் பங்கேற்கவில்லை
எனத் தெரிவித்தார்.