July 22, 2021
தண்டோரா குழு
எந்த கடைகளில் குட்கா விற்பனை செய்யப்படுகிறதோ அதற்கு உடனே சீல் வைக்க வேண்டும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,
குட்கா, பான் விற்பனையை இரண்டு மாதங்களில் ஒழிக்க வேண்டும்.
கடைகளில் சென்று குட்கா கொடு என்று கேட்பதில்லை, தலையணை கொடு என கோட் வேர்டு வைத்து வாங்குகின்றனர். இந்த குறியீடெல்லாம் குட்கா விற்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கு மட்டுமே தெரிகிறது.
கடந்த 2 மாதங்களில் குட்கா விற்பனையைத் தடுப்பதில் நாம் கவனம் செலுத்தவில்லை என்பது உண்மை தான்.கொரோனா தடுப்புப் பணியில் தான் அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நாளை முதல் அனைத்து கடைகளையும் சோதனை செய்ய வேண்டும்.எந்த கடைகளில் குட்கா விற்கப்படுகிறதோ அந்தக் கடைகளை உடனடியாக சீல் வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் குட்கா இல்லை என்ற நிலையை ஓரிரு மாதங்களில் உருவாக்கியே தீர வேண்டும்.
ஆட்சிக்கு நல்ல பெயர் வருகிறதா? கெட்ட பெயர் வருகிறதா? என்பது முக்கியமல்ல; குட்காவை ஒழிப்பதால் 4 பேர் சபித்தாலும், 400 பேர் வாழ்த்துவர். 400 பேரின் வாழ்த்தே பெரிது.
குட்கா, பான்பராக் விற்பனையை முழுமையாக ஒழிக்கும் மாவட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் கைகளால் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படும் என கூறியுள்ளார்.