• Download mobile app
03 Aug 2026, MondayEdition - 3827
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எந்திரன் திரைப்பட வழக்கில் நேரில் ஆஜராக இயக்குநர் ஷங்கருக்கு 10 ரூபாய் அபராதம்

September 3, 2018 தண்டோரா குழு

எந்திரன் திரைப்பட கதை உரிமை கோரிய வழக்கில் சாட்சி அளிக்க நீதிமன்றத்திற்கு ஆஜராகாத இயக்குனர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் என்றழைக்கப்படும் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010ல் வெளியான படம் எந்திரன் படம். இப்படம் தமிழ் சினிமாவுக்கே புதிய அத்தியாயத்தை உருவாக்கி தந்ததையடுத்து, இதன் இரண்டாம் பாகம் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என வழக்கு தொடர்ந்து எழுத்தாளர் ஆரூர், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.இதனையடுத்து,தன் தரப்பு ஆதாரங்களை ஷங்கர் நீதிமன்றத்தில் சமர்பித்துவிட்ட நிலையில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி ஷங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும் அவரை எதிர் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம். சுந்தர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குனர் ஷங்கர் வெளியூரில் இருப்பதால் வழக்கு விசாரணை தள்ளி வைக்க வேண்டும் என அவரது தரப்பில் முறையிடப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி, இயக்குனர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாகவும், இந்தத் தொகையை புளூ கிராஸ் அமைப்பிடம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், வழக்கின் விசாரணை வரும் 12 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

மேலும் படிக்க