• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எத்தனை முதல்வர்கள் வந்து போனாலும், சென்னை வெள்ளம் பிரச்சினை முடியவில்லை – நித்யானந்தா

November 20, 2021 தண்டோரா குழு

இந்தியாவில் குற்ற வழக்குகளில் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி விட்டார்.அவர் கைலாசா என்ற தீவை உருவாக்கி இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் ஆன்லைன் மூலம் தனது பக்தர்களுக்கு சொற்பொழிவாற்றுவதோடு, சமூக வலைதளங்களில் அடிக்கடி வீடியோக்களை வெளிட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று கைலாசாவில் கார்த்திகை தீபத்திருவிழாவை சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடத்தி கொண்டாடி உள்ளார்.
திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்ட அதே நேரத்தில் அவர் கைலாசாவிலும் தீபம் ஏற்றி கொண்டாடி உள்ளார். இதே போல பெங்களூரு மற்றும் நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள அவரது ஆசிரமங்களிலும் தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

இதற்கிடையே அவர் சமீபத்தில் வெளியிட்ட வெளியிட்ட ஒரு வீடியோவில் சென்னை மழை வெள்ளம் பற்றி பேசியுள்ளார்.

முகநூலில் மீம்ஸ் ஒன்றை பார்த்தேன். அதில், சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு முதல்வராக இருந்தவர் வேட்டியை மடித்துக் கொண்டு சென்னை வெள்ளத்தை பார்வையிடுகிற மாதிரியும், அதற்கு பிறகு முதல்வரானவரும் வேட்டியை மடித்துக் கொண்டு சென்னை வெள்ளத்தை பார்வையிடுவது மாதிரியும் இருந்தது.

இந்த மாதிரி வேற வேற முதல்வர்கள் வேட்டியை மடித்துக்கொண்டு சென்னை வெள்ளத்தை பார்வையிடுகிற போட்டோக்கள் இருந்தன. எத்தனை முதல்வர்கள் வந்து போனாலும், சென்னை வெள்ளம் பிரச்சினை முடியவில்லை.

அதாவது அடிப்படையான பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. தண்ணியோட வீட்டில் நாம் வீடு கட்டியதால், இப்போது நம்ம வீட்டில் தண்ணீர் வீடு கட்டியுள்ளது.மழை வெள்ளத்தை பெரிய பெரிய ஆளுங்க வந்து பார்வையிட்ட உடனே, நம்முடைய கவனம் திசை மாறி விடுகிறது. இதுவும் ஒரு பிரச்சினை.

இந்த மீம்சை பார்க்கும்போது, இத்தனை ஆண்டு காலமாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை அல்லது பிரச்சினை முற்றிப் போய் விட்டது என்பது தெரிகிறது.

மழை அடிக்கிற மாதிரி அடிக்கும், நம்ம அழுகிற மாதிரி அழணும். நிவாரண உதவி நடக்கிற மாதிரி நடக்கும். இது அடுத்த வரு‌ஷமும் நடக்கும். அவ்வளவுதான். எங்கோ இயற்கையோடு நமக்கு இருக்கும் தொடர்பை இழந்து விட்டோம். அதுதான் பிரச்சினை.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி உள்ளது.

மேலும் படிக்க