May 30, 2018
தண்டோரா குழு
எதற்கு எடுத்தாலும் போராட்டம் என்று மக்கள் சென்றால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில்,துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களையும்காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறவும் நடிகர் ரஜினி தூத்துக்குடி சென்றார்.திறந்தவெளி வாகனத்தில் தூத்துக்குடி மக்களை சந்தித்தார். பின்னர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 48 பேரை சந்தித்து ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.மேலும், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரூபாயும் ரஜினி வாங்கினார்.
பின்னர் தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த ரஜினிகாந்த் விமான நிலையத்தில்
செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய ரஜினிகாந்த்,
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப்போல, ஸ்டெர்லைட் போராட்டத்திலும் கடைசி நாளில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர்.சமூக விரோதிகள் போலீசை அடித்ததால் தான் பிரச்சனை ஆரம்பமானது. ‘ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் புகுந்த சமூக விரோதிகள்மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.காவல்துறைமீது தாக்குதல் நடத்தினால் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.எதற்கு எடுத்தாலும் போராட்டம் என்று மக்கள் சென்றால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்று அவர் ஆவேசமாக பேசினார்.