July 25, 2025
தண்டோரா குழு
கோவையில் மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் பேராசிரியர் எம்.ஹெச் ஜவாஹில்லா எம்.எல்.ஏ கோவைக்கு பல்வேறு நிகழ்ச்சிக்கு வருகை தந்தார். அவர் கோவை குனியமுத்தூரில் தனியார் ஓட்டலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
கோவை 86 வது வார்டு பகுதியில் நாய் கருத்தடை மையத்தை உடனடியாக அகற்ற வேண்டும். கோவை விமான நிலையத்தில் இஸ்லாமியர்கள் தொழுவதற்கு பள்ளிவாசல் அமைக்க வேண்டும்.கோவையில் உள்ள குனியமுத்தூர் ஈராக் கார்டன், வடவள்ளி இன்னும் பல்வேறு பகுதிகளில் பள்ளிவாசல்களுக்கு கட்டுவதற்கு அனுமதி உள்ள போதும் பல்வேறு பள்ளிவாசல் வேலைகள் தற்போது வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதை மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக சரி செய்ய வேண்டும் . தி.மு.கவில் உள்ள கூட்டணிகள் மிகவும் வலுவாக உள்ளது. 2026 ஆட்சி அமைப்பது திராவிட முன்னேற்றக் கழக அரசு அமையும். எதிர்க்கட்சி எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பரப்புரை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 2026 சட்டமன்றத் தேர்தல் மனிதநேய மக்கள் கட்சி திராவிட முன்னேற்ற கழக கூட்டணி தொடரும் என்றார்.
பேட்டியின் போது நில பொருளாளர் உமர், மாநில செயலாளர் சாகுல் ஹமீத்,மாநில பிரதிநிதிகள் அக்பர் அலி, சுல்தான் அமீர், மாவட்டத் தலைவர் சர்புதீன், மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தமுமுக மாவட்ட செயலாளர் முஜிப் ரஹ்மான், மாவட்டத் துணைச் செயலாளர்கள் குனிசை ஷாஜகான்,ஆஷிக் அகமது,அபு,தெற்கு பகுதி பொறுப்பாளர்கள் ரசீத அலி, முபாரக், முகமது கனி, அப்துல் ரசாக், இந்த செய்தியாளர் சந்திப்பில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.