August 27, 2021
தண்டோரா குழு
2021 – எச்டிஎப்சி மல்டி அசட் பண்ட் (திட்டம்), ஒராண்டில் நிர்ணயிக்கப்பட்ட 25.02 சதவிதம் காட்டிலும் 29.38 சதம் லாபமாக அளித்துள்ளது. (90 சதம் நிப்டி 50 ஹைபிரிட் கம்போசிட் கடன் 65:35 இன்டெக்ஸ் பிளஸ் 10 சதம் உள்நாட்டு தங்க விலை நிலவரம் நிப்டி 50 (ஒட்டுமொத்த குறியீடு வருவாய்) ஒவ்வொரு சொத்து வகையும் வித்தியாசமான பொருளாதார சுற்றைக் கொண்டது.கடந்த 99ம் நிதியாண்டு முதல் 23 நிதியாண்டுகளில், கடன் பத்திரம் மற்றும் தங்க முதலீட்டுகளை விட, பங்கு முதலீடுகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. கடன் பத்திரம் மற்றும் தங்கம், 5, 6 ஆண்டுகளில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டுள்ளன.
சொத்து வகைகளுக்கான தரவுகள் பயன்பாடு: பங்கு – நிப்டி50, கடன் – நிப்டி ஜி செக் 10 ஆண்டு நிர்ணயம், தங்ம் சந்தை நிலவரம் 10 ஜிஎம்எஸ் முலகங்கள்:ப்ளும்பெர்க், எம்எப்ஐஎக்ஸ்ப்ளோரர்,வேர்ல்டு கோல்டு கவுன்சில்.
சொத்து வகையில் வெல்பவர்கள், சொத்து வகையை தொடர்ந்து மாற்றி அமைத்து வருகின்றனர். எச்டிஎப்சி மல்டி அசட் பண்ட், 3 வகைகளிலும் முதலீடு செய்கிறது. பங்கு, கடன் மற்றும் தங்கம். முதலீட்டாளர்களின் தேவைக்கு ஏற்ப இது திட்டமிடப்பட்டுள்ளது. முதலீட்டை பெருக்க பங்குகளும்,கடன் பத்திரம் நிலைத்தன்மைக்கும்,தங்கம் பாதுகாப்பிற்கும் உறுதி செய்கின்றன.பணவீக்கம் மற்றும் ரொக்க மதிப்புகளில் ஏற்றத்தாழ்வுகளை தங்கத்தின் முதலீடு பாதுகாக்கிறது.
சொத்து ஒதுக்கீட்டிற்கு முன்மாதிரியான அணுகுமுறை பின்பற்றப்படும் திட்டம்:
இந்த மாடல், நான்கு வகைகளில் பங்கு முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது 40 சதம் முதல் 80 சதம் வரை மாறுபாடுகளை கொண்டதாக இருக்கும்.சந்தையின் மதிப்பு அதிகமாக இருப்பின், பங்கு முதலீட்டின் அளவு குறைவாக இருக்கும். இந்த முதலீடு எதிர்மறையாக மாறும்.
கடந்த 31 ஜூலை 2021 வரை, மொத்த முதலீட்டில் பங்கு முதலீட்டுக்கான ஒதுக்கீடு 53.8 சதவீதமாக உள்ளது.ஹெட்ஜ் செய்யப்பட்ட பங்கு முதலீடு 11.7 சதவீதம்.இரண்டையும் சேர்த்து ஒட்டுமொத்த பங்கு முதலீடு 65 சதம்.இது, பங்குகள் மீதான வரி சலுகையையும் தரும்.
ஒட்டுமொத்த முதலீட்டில் 10 சதம் முதல் 30 சதம் வரையிலான முதலீடு கடன் பத்திரங்களிலும் மற்றும் 10 சதம் முதல் 30 சதம் வரையிலான முதலீடு தங்கத்திலும் முதலீடுகள் செய்யப்படுகின்றன.கடந்த 31 ஜூலை 2021 வரையில்,தங்கம்,இடிஎப் மற்றும் கடன் (ரொக்கம் மற்றும் அதற்கு நிகரான மதிப்பீடு மற்றும் தற்போதைய மதிப்பு) முறையே 10 சதம் மற்றும் 21 சதம் சதவீதமாக உள்ளது.
இந்த திட்டம் தற்போது பெரும் முதலீட்டுகளை கொண்ட 70 சதம் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யப்ட்டுள்ளன.அதிக அளவில் நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், உணவு மற்றும் தொழில் நிறுவனங்களில் இதன் முதலீடுகள் உள்ளன. குறைந்தபட்சமாக நிதி மற்றும் எரிபொருள் நிறுவனங்களில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.
எச்டிஎப்சி அசட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட், நிறுவனத்தின் முதுநிலை பொது மேலாளர் அமித் கனத்ரா பேசுகையில்,
“சர்வேதச மற்றும் உள்நாட்டு வளர்ச்சி, நிதி ஒதுக்கீடு மற்றும் நிதி கொள்கைகள், தேவைக்கான மீட்பு, தடுப்புசி திட்டம் மற்றும் தொழில் நிறுவனங்களின் லாப விகிதம் போன்றவை மிகவும் சாதகமான நிலையில் இருந்தது. இந்தியாவில், கோவிட் 19 தொற்றுக்கு பின் நிறுவனங்களின் வணிக விகிதம் வலுவாகவே இருக்கிறது.
இது முதலீட்டாளர்கள்,பங்குகளில் முதலீடு செய்ய வாய்ப்பளித்து, நல்ல பலனை அளித்துள்ளது. கோவிட் 3வது அலையின்போதும் நிலையான மீட்சி, அதிக பணவீக்கம் மற்றும் வலுவான மதிப்பீட்டில் சந்தையின் முன்னேற்றம் போன்றவைகளுக்கும் வாய்ப்புகள் உள்ளன.இந்த நிலையில், முதலீட்டாளர்கள் சொத்து ஒதுக்கீட்டு முறையை கையாள வேண்டும்.பங்கு முதலீட்டில் பங்கேற்பதோடு மட்டுமின்றி,கடன் மற்றும் தங்க முதலீட்டுகளை பயன்படுத்தி,கீழ்நோக்கு மதிப்பு இழப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
எச்டிஎப்சி மல்டி பன்ட் அசட், முன்று வகையான முதலீடுகள், பங்கு, கடன் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு பொருத்தமானதாக இருக்கும்.
கடந்த கால செயல் திறன்கள் எதிர்காலத்திலும் நிலையானது அல்ல.தற்போதைய முதலீடு திட்டமும் மாறுதலுக்கு உட்பட்டது. எச்டிஎப்சி எம்எப்ஃஏஎம்சி, முதலீட்டு திட்டங்கள் மீதான வருவாய்க்கு எவ்வித உத்தரவாதமும் உறுதியும் அளிப்பதில்லை.தற்போதைய பார்வையில் மட்டுமே புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன மற்றும் மாற்றத்திற்கு உட்பட்டது.