• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எச்டிஎப்சி பிளக்ஸி கேப் நிதியின் 26வது ஆண்டு கொண்டாட்டம்

July 7, 2021 தண்டோரா குழு

எச்டிஎப்சி பரஸ்பர நிதியின் முதலீட்டு மேலாளராக செயல்படும் எச்டிஎப்சி சொத்து மேலாண்மை கம்பெனி லிமிடெட், இந்தியாவின் முன்னணி மீச்சுவல் பண்ட் நிறுவனங்களில் ஒன்றாக, கடந்த மே 31 வரையில் 4.11 லட்சம் கோடி ருபாய் மதிப்பீட்டினை நிர்வகித்து வருகிறது. கடந்த 26 ஆண்டுகளாக சொத்து உருவாக்கத்தில் எச்டிஎப்சி பிளக்ஸி கேப் நிதி பயணத்தில் தொடர்கிறது.

எச்டிஎப்சி பிளக்ஸி கேப் நிதியானது, பழமையானது, முதலீட்டாளர்களுக்கு கடந்த 25 ஆண்டுகளாக பல சரித்திரமிக்க பாதையை அமைத்துக் கொடுத்துள்ளது.எச்டிஎப்சி பிளக்ஸி கேப் நிதியானது, சந்தையில் சரிவுகள் ஏற்பட்டபோதும் அவற்றை வெற்றிகரமாக கடந்து வந்துள்ளது.

2000-ல் தகவல் தொழில்நுட்பம், 2007 கட்டமைப்புகள் மற்றும் ரியல் எஸ்டேட், 2015 மருந்துகள், 2018-ல் நடுத்தரமுதலீட்டு பங்குகள் போன்ற சரிவுகளை சந்தித்துள்ளது. இத்தகைய சரிவுகளை வெற்றிகரமாக கடந்து நிலையான வணிகத்தை அளித்துள்ளதோடு, மதிப்புகளையும் அதிகரித்துள்ளது.

கடந்த 26 ஆண்டுகளுக்கு முன் எச்டிஎப்சி பிளக்ஸி கேப் நிதியில் முதலீடு செய்தவர்களுக்கு மிகுந்த செல்வத்தை வழங்கியுள்ளது. 1995 ஜனவரி 1ல் துவங்கிய நாளில் ஒரு லட்ச ருபாய் முதலீடு செய்திருந்தால், கடந்த 2021 மே 31 ல் அது 87.60 லட்ச ருபாயாக வளர்ச்சி பெற்றிருக்கும். ஆண்டுக்கு 18.44 சதம் ஒட்டுமொத்த வளர்ச்சி பெற்றிருக்கும். மாதந்தோறும் 10 ஆயிரம் ருபாய் முதலீடு செய்திருந்தால் 9.57 கோடியாக உயர்ந்திருக்கும். 26 ஆண்டுகளில் சந்தை 50 சதம் வரையிலும் வீழ்ச்சி பெற்று உயர்ந்துள்ளது.

இந்த வீழ்ச்சியிலும் வலுவான மீட்சியை பெற்றது. இதன்தற்போதைய 2021 ஜூன் 21 அன்று ஒட்டுமொத்த மதிப்பு ரு.882 ஆக உள்ளது. துவக்க காலத்திலிருந்து ஆண்டுக்கு ஒட்டுமொத்த வளர்ச்சி 18 சதம் இருந்தது.

எச்டிஎப்சி சொத்து மேலாண்மை கம்பெனி லிமிடெட்டின் தலைமை முதலீட்டு அதிகாரி மற்றும் செயல் இயக்குனர் பிரசாந்த் ஜெயின் பேசுகையில்,

“எச்டிஎப்சி பிளக்ஸி கேப் நிதி, பொருளாதார வீழ்ச்சி மற்றும் நிறுவனங்களின் லாபத்தையும் சமமாக நிலை நிறுத்தி வளர்ச்சி பெற்றுள்ளது. நீண்ட காலத்திற்கான தொலைநோக்கோடு வளர்ச்சியை அடிப்படையாக கொண்டதாக உருவாக்கப்பட்டது. குறைவான முதலீட்டில், நியாயமான மதிப்பீட்டில், வலுவான பொருளீட்டலுடன் அமைந்தது.

தற்போது சந்தை விரைவான போக்கில் இருந்தாலும், நீண்ட நாள் அடிப்படையில், இன்னும் மதிப்பில் குறைவான பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்து வருகிறது,” என்றார்.

மேலும் படிக்க