• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எச்டிஎப்சி உருவாக்கியது சர்வதேச குறியீட்டில் நிதியின் நிதி; உலகளவு பங்கு சந்தையில் முதலீடு செய்ய ஒரு வாய்ப்பு

September 17, 2021 தண்டோரா குழு

இந்தியாவின் முன்னணி மீச்சுவல் பண்ட் நிறுவனங்களில் ஒன்றான எச்டிஎப்சி மீச்சுவல் பண்ட் முதலீட்டு மேலாளர்களின் நிறுவனமான எச்டிஎப்சி சொத்து மேலாண்மை கம்பெனி லிமிடெட், முதலாவது சர்வேதச சந்தைகளின் குறியீட்டில் புதிய நிதியின் நிதி திட்டத்தை உருவாக்கியுள்ளது.

இது, 5 கண்டங்கள், 23 முன்னணி நாடுகளின் சந்தைகள், 1500 க்கும் மேற்பட்ட தொகுப்புகள் மற்றும் 14 கரன்சிகள், சர்வதேச பொருளாதாரத்தில் 56 சதம் மற்றும் 50 சதம் உலக சந்தை முதலீடுகளின் அடிப்படையாக கொண்ட ஒரே நிதி திட்டம்.

உலக அளவில் முன்னேறிய நாடுகளின் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட பல்துறை முதலீட்டை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது பொருத்தமாக அமையும். உலக அளவில் 510 பில்லியன் டாலர் மதிப்புமிக்க சொத்து மேலாண்மை செய்து வரும் கிரெடிட் சுஸ்சி நிறுவனத்துடன் இணைந்து இந்த நிதி துவக்கப்படுகிறது.

சர்வதேச குறியீட்டு அளவீடான எம்எஸ்சிஐ செயல்பாட்டின் அடிப்படையில் கிரெடிட் சுஸ்சி இன்டெக்ஸ் பன்ட் மற்றும் ஈடிஎப் களில் இந்த முதலீடுகள் இருக்கும். சர்வேதச அளவில் பிரபலமான எம்எஸ்சிஐ இன்டெக்ஸ், 23 வளர்ந்த நாடுகள், 1500க்கும் மேற்பட்ட தொகுப்புகள் மற்றும் 85 சதம் சந்தையில் வேகமாக கைமாறும் மூலதன பங்குகளை கொண்ட குறியீடு ஆகும்.

எச்டிஎப்சி டெவலப்டு வேர்ல்டு இன்டெக்ஸ் பண்ட் ஆப் பண்ட்ஸ், உள்நாட்டு பங்கு முதலீடுகள் என்ற எல்லையையும் தாண்டி, உலகின் வளர்ச்சி பெற்ற நாடுகளின் உள்ள நிறுவனங்களின் பங்கு சந்தை பயன்களை பெற முதலீட்டாளர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது.

இந்த நிதியானது, உலக அளவில் உள்ள பொருளாதாரம் மற்றும் சந்தை, பண மதிப்பு வீழ்ச்சிக்கு எதிரான நிலைத்தன்மை, சர்வதேச அளவில் வளர்ச்சி வாய்ப்புகளால் ஏற்படும் பயன்கள், தனித்தன்மை மிக்க சர்வதேச பார்வைகளுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. எம்எஸ்சிஐ சர்வதேச குறியீடானது, தகவல் தொழில்நுட்பம், நிதி மற்றும் மருத்துவ துறையில் புதுமை படைக்கும் 50 நிறுவனங்களில் 40 நிறுவனங்களின் பட்டியலை கொண்டுள்ளது. நிப்டி 50 யை விட ஏற்றத்தாழ்வுகளையும், நிப்டி 50 உடன் குறைவான தொடர்புகளையும் கொண்டது. முதலீட்டாளர்களுக்கு இது பொருள்மிக்க பல்நோக்கு மாற்று முதலீடாக அமையும். இந்த புதிய நிதியாக்கத்துக்கான திறவு 2021 செப்டம்பர் 17ல் துவங்குகிறது. அக்டோபர் 1 ல் நிறைவு பெறுகிறது. ஒதுக்கீடு செய்த ஐந்து வணிக நாட்களுக்கு பின் மறு திறப்பில் மீண்டும் வாங்க வாய்ப்புகள் உள்ளன.

எச்டிஎப்சி ஏஎம்சி யின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் நவ்நீத் முனட் இந்த நிதி குறித்து பேசுகையில்,

“முதல் முறையாக இது போன்ற நிதியை அறிமுகம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். வளர்ந்த நாடுகளில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு இது ஒரு வழியாக உள்ளது. இந்த ஒரே நிதியானது, நாடுகள், கரன்சிகள், பல்துறைகள், அளவீடு மற்றும் தன்மையிலும் பங்கேற்க வாய்ப்பளிக்கிறது.

சர்வதேச வரிகள் மற்றும் கட்டணங்களிலும் மிகவும் செயல்திறன் வாய்ந்ததாக உள்ளது. வளர்ந்த நாடுகளின் சந்தையுடன், இந்திய சந்தையானது குறைவான தொடர்புகளைக் கொண்டதாக உள்ளது. இந்த நிதி ஒரு ஆரோக்கியமான பல்நோக்கு முதலீட்டுத் திட்டமாக இருக்கும்,” என்றார்.

மேலும் படிக்க