• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘எங்கு போனாலும் நானும் வருவேன்’ அடம்பிடிக்கும் அணில் அணிலுடனே பயணிக்கும் வாலிபர்

February 7, 2022 தண்டோரா குழு

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹரி (வயது 32). ஐடி ஊழியராக வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவருடைய வீட்டில் அடிபட்ட நிலையில் குட்டி அணில் ஒன்று வந்துள்ளது.

இந்த அணிலுக்கு சிகிச்சை அளித்து, ஹரி தினமும் உணவளித்து வளர்த்து வந்தார். அதற்கு அப்பு என்னும் பெயர் சூட்டினார். ஹரி செல்லும் இடங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் அவருடனே அணில் பயணித்து வருகிறது. கடந்த 8 மாத காலமாக ஹரியுடன் அணில் செல்லுமிடங்களில் எல்லாம் சுற்றி வருவதால் அணிலைலையும் ஹரியையும் பொதுமக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

மேலும் எங்கள் வீட்டிற்கு அடிபட்ட நிலையில் அணில் வந்தது. அதனை எடுத்து சத்துமாவு கொடுத்து வளர்த்து வந்தேன். நாள் முழுவதும் என்னுடன் தான் இருந்து வருகிறது. இரவு தூங்கும் போதும் என் உடைக்குள் தூங்கி கொள்ளும். மோட்டார் சைக்கிளில் வெளியே செல்லும்போது என்னுடனே பயணித்து வருகிறது. மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றாலும் கூட அப்பு கீழே விழாமல் பிடித்துக் கொள்வான் ஹரி தகவல் தெரிவித்து விடைப்பெறறார்.

மேலும் படிக்க