• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எங்கள் வீட்டினுள் பாதாள அறையோ, கட்டிலோ அல்லது படிகட்டுகளோ இல்லை – லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி

May 6, 2019 தண்டோரா குழு

எங்கள் வீட்டினுள் பாதாள அறையோ, கட்டிலோ அல்லது படிகட்டுகளோ இல்லை என லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் கூறியுள்ளார்.

நாடு முழுவதிலும் பிரபல லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 4-ம் தேதி வரை சோதனை நடத்தப்பட்டது. இதில் பல கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியாகின. இந்நிலையில், எங்கள் வீட்டினுள் பாதாள அறையோ, கட்டிலோ அல்லது படிகட்டுகளோ இல்லை என லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

கோவையில் எங்கள் இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ98,820 மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதற்கான சட்டப்பூர்வ கைப்பற்றுதல் படிவமானது வருமான வரித்துறையின் உதவி இயக்குநரால் முத்திரையிடப்பட்டு கையொப்பமிட்டு கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் வீட்டினுள் பாதாள அறையோ, கட்டிலோ அல்லது படிகட்டுகளோ இல்லை இது தொடர்பாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. அந்த செய்தி காணோளிக்கும் எங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று நான் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க