March 21, 2021
தண்டோரா குழு
கோவை சிங்காநல்லூர் மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர் டாக்டர் ஆர் மகேந்திரன்இன்று சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதன்படி,தேவேந்தர் வீதி,உப்பிலிபாளையம் ஜங்ஷன்,வரதராஜபுரம் மெயின் ரோடு, வெங்கடேச வீதி,காந்தி நகர்,பாலாஜி நகர், திலகர் நகர்,சி.எம்.சி காலணி,TNHB ஹவுஸிங் யூனிட், 80 பிட் ரோடு,TNHB காலணி, போலீஸ் காலணி,விஜிஎம் மருத்துவமனை,ஜெயலட்சுமி மில்ஸ்,லட்சுமி மில்ஸ் காலணி,சிங்காநல்லூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடம் தன் கட்சி சின்னமான டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
காந்தி நகர் நலசங்கம் சார்பில் அப்பகுதி மக்கள் தங்கள் அடிப்படை வசதிகள் குறித்து டாக்டர் மகேந்திரனிடம் தங்கள் கோரிக்கைகள் முன் வைத்தனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில்,
இதற்கு முன் இருந்த சட்டமன்ற உறுப்பினர் எந்த அடிப்படை வசதிகள் கூட செய்யவில்லை. இரண்டு திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்டு நாங்கள் ஏமாந்து விட்டோம் என்றனர். அவர்களுக்கு பதிலளித்த டாக்டர் மகேந்திரன் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் உங்களுக்கான கோரிக்கைகளை நான் நிறைவேற்றுவேன். உங்கள் கோரிக்கைகளை எழுதி நான் ஒரு பத்திரத்தில் கையெழுத்து போட்டுக்கொடுக்கவும் தயாராக இருக்கிறேன். இதை நிறைவேற்றவில்லை என்றால் என்னிடம் தாராளமாக கேட்கலாம்.ஒவ்வொரு வார்டுக்கும் மக்கள் சேவை மய்யம் இருக்கும். மாதம் ஒரு முறை உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார்.
மகேந்திரனுக்கு நம்பிக்கை அளித்த இளைஞர்கள்;
பிரச்சாரத்தின் போது வேட்பாளர் மகேந்திரனை சந்தித்த சில இளைஞர்கள் எங்கள் முதல் ஓட்டு உங்களுக்கு தான். நீங்கள் தைரியமாக செல்லுங்கள் என அவருக்கு நம்பிக்கை அளித்தனர். பின்னர்இளைஞர்கள் உற்சாகமாக மகேந்திரன் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
மேலும்,மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் டாக்டர் மகேந்திரனுக்கு வாக்களிக்க கோரி துண்டு பிரசுரங்களை விநியோகித்து சென்றனர்.