• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எங்கள் காவிரி.. எங்கள் உரிமை.. கோவையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

September 30, 2023 தண்டோரா குழு

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கான காவிரி நீரை தருவதற்கு கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், தமிழக விவசாயிகள் உட்பட பல்வேறு கட்சியினர் தமிழக அரசு காவிரி நீரை பெற்று தர கர்நாடக அரசுக்கு அழுத்தம் தர வேண்டுமென தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மத்திய அரசும் தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை கர்நாடக அரசு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்தும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை டாடாபாத் பகுதியில் கோவை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மண்டல செயலாளர் அப்துல் வகாப் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் “எங்கள் காவிரி எங்கள் உரிமை, காவிரியில் வேண்டும் தண்ணீர் மக்களுக்கு அதுவே குடிநீர், தண்ணீரை கொடு அல்லது தனியாக விடு, காவிரி உனக்கு அரசியல் எங்களுக்கு வாழ்வியல்” உள்ளிட்ட பல்வேறு பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதில் தண்ணீர் கேட்பது பிச்சை இல்லை எங்கள் உரிமை என்றும், காவிரி நமது குருதி ஓட்டம் என்றும், கன்னடனே ஒழிய வேண்டும் என்றும், நீரை தர மறுத்தால் மின்சாரத்தை தர மறுப்போம் என்றும் கண்டன முழக்கங்கள் எழுப்பட்டன.

இதில் செய்தியாளர்களை சந்தித்த அப்துல் வகாப்,

கர்நாடகத்தில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தை வஞ்சிப்பதாக தெரிவித்தார். கர்நாடகாவில் தமிழக முதல்வரின் படத்திற்கு கர்நாடக மக்கள் திதி கொடுத்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட போதும் கூட இங்குள்ள அக்கட்சியினர் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் உறங்கிக் கொண்டு இருப்பதாகவும் அவர்களுக்கு சீட்டு ஓட்டும் தான் முக்கியமாக உள்ளது ஆனால் எங்களுக்கு அப்படி இல்லை என தெரிவித்தார்.

மேலும் படிக்க