• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எங்கள் அடுத்த டார்கெட் யானை. பீட்டா அமைப்பினரின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.

March 29, 2016 வெங்கி சதீஷ்

தமிழகத்தில் பொங்கல் சமயத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் எனச் சர்வதேச விலங்கு நல அமைப்பான பீட்டா அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

இதில் குறிப்பிடும் படியாகக் கடந்த ஜனவரி மாதம் அழிந்துவரும் வன விலங்கு பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டதை அடுத்து பீட்டா அமைப்பினர் மிக அதிக செலவு செய்து ஒரு வழக்கறிஞரை அமர்த்தி ஜல்லிக்கட்டு நடத்த தடையாணை பெற்றனர்.

இதனால் பொங்கல் சமயத்தில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு நடத்தப்படாமலும் ஆங்காங்கே தானாக சாலையில் காளைகளை ஓடவிட்டு அவற்றைப் பிடித்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டும் விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றன. தற்போது அந்தப் பிரச்சனை சற்றே ஓய்ந்து விட்ட நிலையில் பீட்டா அமைப்பினருக்கு மேலும் ஒரு அவல் தற்போது கிடைத்துள்ளது.

அது தான் கேரளாவில் அனுமதியின்றி வளர்க்கப்படும் யானைகளுக்கான அனுமதி குறித்த பிரச்சனை. கேரளா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி வளர்க்கப்பட்டு வந்த 289 யானைகளுக்குச் சிறப்பு அனுமதி வழங்கக் கேரளா அரசு முடிவெடுத்து தலைமை வனவிலங்கு பாதுகாவலருக்கு உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து அவர் கேரளா மாநிலத்தில் உள்ள அனுமதியற்ற யானைகளை அரசிடம் காட்டி உரிமம் பெற அறிவித்தார். இதையடுத்து பீட்டா இந்தியா அமைப்பு தற்போது கேரளா அரசிற்கு அந்த உத்தரவைத் திரும்பப்பெற வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதையடுத்து அங்கும் பிரச்சனை கிளம்ப வாய்ப்பு உருவாகியுள்ளது. இது குறித்து யானை வளர்பவர்கள் பேசும்போது, தற்போது வீடு மற்றும் வணிகத்திற்காக வளர்க்கப்படும் யானைகள் முழுக்க முழுக்க நகரம் மற்றும் கிராமம் சார்ந்த சூழலில் இருக்கும் எனவே அவற்றை இங்குதான் வளர்க்க வேண்டும்.

இங்கு வளர்ந்த யானைகளை மீண்டும் வனப்பகுதியில் விட்டால் அங்குள்ள யானைகள் இவற்றைக் கொன்றுவிடும் இதைத்தான் விலங்குகள் நல அமைப்பு விரும்புகிறதா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் படிக்க