• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எகானமிக் டைம்ஸ்-யின் ஸ்டார்ட் அப் விருது 2021 – கோவை.கோ நிறுவனம் “பூட்ஸ்ட்ராப் சாம்ப்” விருதை வென்றது

September 30, 2021 தண்டோரா குழு

கோவை.கோ ஒரு பன்னோக்கு மென்பொருள் நிறுவனம், வணிக, தொழில் நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு, அறிவுசார் மேலாண்மை போன்றவைகளை, இந்தியாவில் கோவையிலும், இங்கிலாந்தில் லண்டனிலும் செயல்படுத்தி வரும் நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்திற்கு எகானமிக் டைம்ஸ் வழங்கும் ஸ்டார்ட் அப் 2021 விருதான, “பூட்ஸ்ட்ராப் சாம்ப் 2021” விருது கிடைத்துள்ளது.

இந்த விருது, இந்திய தொழில்முனைவோருக்கு ஒரு அங்கீகாரம் தரும் விருது.அதோடு, இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நிறுவனர்கள்,ஸ்டார்ட் நிறுவனங்களின் செயல்பாடுகளை கவுரவிப்பதாக இது அமைகிறது.

கோவை.கோ நிறுவனமானது, நடுவர்கள் தயாரித்த பட்டியலில், செயல்பாடுகளை அதிகரித்தல்,நிதிநிலை வளர்ச்சி மற்றும் கோவை போன்ற இரண்டாம் நிலை நகரங்களிலிருந்து சர்வதேச அளவில் வணிகம் மேற்கொள்ளல் போன்றவைகளில் முன்னிலை பெற்றது.

கோவை.கோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி சரவணக்குமார் கூறுகையில்,

“இத்தகைய விருதுகள் பெறுவதும், அங்கீகாரிப்பதும் எங்களையும் பணியாற்றுவோரையும் ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் எங்களது தயாரிப்பை கட்டமைப்பதிலும், வாடிக்கையாளர்களை கவர்வதிலும் மிகுந்த கவனம் செலுத்தினோம்.தற்போது கிடைத்துள்ள அங்கீகரிப்பதும், இதே பாதையில் தொடர்ந்து பயணிக்கவும், 2030ல் சாப்ட்வேர் சேவையில் தனித்துவம் பெறவும் வாய்ப்பாக அமையும். கோவை நகரை, நாட்டின் அடுத்த சாப்ட்வேர் சேவை மையமாக மாற்ற எங்களது அணியினர் விரும்புகின்றனர்.

இரண்டாம் நிலை நகரங்களின் முன்னேற்றத்துக்காவும், இளைய தலைமுறையினர், திறன்மிக்க புதியவர்களை ஊக்குவித்து, தொழில் கல்வி திட்டங்களுக்கு ஊக்கப்படுத்தி சமுதாயத்திற்கு பணியாற்றுவோம்,” என்றார்.

கோவை.கோ 2011ம் ஆண்டில் நிறுவப்பட்டது. நிறுவனங்களை உருவாக்குதல், சாப்ட்வேர் சேவை, உள்ளிட்ட பணிகளில் வருவாய் ஈட்டி வருகிறது. பல்வேறு நாடுகளில் 250க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் படிக்க