• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கையால் சிலருக்கு என் மீது கோபம் இருக்கிறது – பிரதமர் மோடி

January 19, 2019 தண்டோரா குழு

ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கையால் சிலருக்கு என் மீது கோபம் இருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கொல்கத்தாவில் மாநாடு நடத்தி வருகின்றன. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியின் ஆட்சி குறித்து மோடி குறித்தும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதற்கிடையில், யூனியன் பிரதேசமான தாத்ரா – நாகர்ஹவேலியில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது எதிர்க்கட்சி தலைவர்கள் மாநாடு நடத்தி வரும் நிலையில், அவர்களை விமர்சிக்கும் விதமாக மோடி பேசியிருக்கிறார்.

விழாவில் பேசிய மோடி,

ஊழலுக்கு எதிராக நான் கடும் நடவடிக்கை எடுத்தேன். ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கையால் சிலருக்கு என் மீது கோபம் இருக்கிறது; ஏனென்றால் மக்கள் பணத்தை அவர்கள் சுரண்டுவதை நான் தடுத்துவிட்டேன். இது இயற்கைதான். இதன் தொடர்ச்சியாக எனக்கு எதிராக கூட்டணியை அமைத்துள்ளார்கள். தங்கள் மாநிலங்களில் ஜனநாயகத்தை புதை குழிக்குள் தள்ளியவர்கள் இப்போது ஜனநாயகத்தை காப்பதுபற்றி பேசுகின்றனர். கூட்டணியில் முழுமையான ஒருங்கிணைப்பின்றி தொகுதி பங்கீட்டுக்கு பேரம் பேசுகின்றனர். தங்களை காப்பாற்றி கொள்வதற்காக கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளனர். அதேசமயம், நாட்டின் வளர்ச்சிக்காக நான் இங்கு இருக்கிறேன். மேம்பாடு என்பது எங்களின் ஒரே குறிக்கோள் என பேசியுள்ளார்.

மேலும் படிக்க