• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஊராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் வருகின்ற 11 ம் தேதி நடைபெறும் – கோவை ஆட்சியர்

January 6, 2020

கோவை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் வருகின்ற 11 ம் தேதி நடைபெறும் எனவும், மறைமுக தேர்தலில் எந்த விதமான விதிமீறலுக்கும் இடம் தராமல், நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலருக்கு போட்டியிட்ட 10 அதிமுகவினரும், 5 திமுகவினரும், 2 பாஜகவினரும் வெற்றி பெற்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி முன்னிலையில், 17 பேரும் பதவியேற்று கொண்டனர். பாஜக மாவட்ட கவுன்சிலர் பாரத் மாதகி ஜெ எனக்கூறி பதவியேற்று கொண்டார். அதிமுகவினர் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நன்றி தெரிவித்தும்,திமுக உறுப்பினர்கள் அண்ணா வாழ்க, கலைஞர் வாழ்க, தளபதி வாழ்க எனக்கூறியும் பதவியேற்றனர்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி,

ஊரக உள்ளாட்சி தேர்தல் கோவை மாவட்டத்தில் எதிர்பார்ப்பிற்கு மேலாக நல்ல முறையில் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் வருகின்ற 11 ம் தேதி நடைபெற உள்ளது.மறைமுக தேர்தலில் எந்த விதமான விதிமீறலுக்கும் இடம் தராமல், நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படும். தேர்தல் விதிமீறல் தொடர்பாக 91 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் படிக்க