• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை – மருத்துவக் குழுவினர்

June 29, 2020 தண்டோரா குழு

ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை – மருத்துவக் குழுவினர்

ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை என மருத்துவக் குழுவினர் கூறியுள்ளனர்.

முதலமைச்சரை சந்தித்த பிறகு மருத்துவ குழுவினர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய அவர்கள்,

கொரோனா பரிசோதனைகளை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளோம்.தற்போது சென்னையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது.தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. காய்ச்சல், சுவை உணர்வு இன்மை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை அவசியம்.திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலையில் கடந்த ஒரு வாரமாக கொரோனா அதிகரித்து வருகிறது.திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலையில் கொரோனா இரட்டிப்பாகும் காலம் குறைந்துவிட்டது.சென்னையில் பின்பற்றப்படும் நோய்த் தடுப்பு முறைகளை மற்ற நகரங்களிலும் பின்பற்ற வேண்டும்.சென்னையில் கொரோனா அதிகமானாலும் தொற்று இரட்டிப்பாகும் காலம் குறைந்துள்ளது.

எப்போதும் பொது முடக்கத்தை நிரந்தரமாக்கி கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சிப்பது சரியான நடவடிக்கையாக இருக்காது.
பொதுமுடக்கம் நோய் தொற்று இரட்டிப்பாகும் காலத்தை அதிகரித்துள்ளதை மறுக்க முடியாது.
கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் பொது முடக்கத்தை தீவிரமாக்கலாம். பொதுப்போக்குவரத்து காரணமாக சில மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகமாகியுள்ளது.பொதுப்போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

பொதுமுடக்கம் தவிர வேறு யுக்திகள் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.பொதுமுடக்கத்தை பரிந்துரைக்க வில்லை,ஆனால் கட்டுப்பாடுகள் தொடர பரிந்துரைத்துள்ளோம்.
பரிசோதனைகளை அதிகரிப்பதால் கொரோனா எண்ணிக்கை அதிகமாகும்.பரிசோதனைகளை அதிகரித்து கொரோனா நோயாளிகளை கண்டறிவதன் மூலம் இறப்பு எண்ணிக்கையை குறைக்க முடியும்.நாட்டிலேயே தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. கொரோனா சிகிச்சைக்கு அமெரிக்காவில் இருந்து கூட மருந்துகளை வரவழைத்துள்ளோம்.சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியில் கொரோனா எளிதாக பரவுகிறது.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

மேலும் படிக்க