April 15, 2020
தண்டோரா குழு
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கின் போது எந்தெந்த சேவைகள் கிடைக்கும்? எவை கிடைக்காது என்பதை மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.
மே 3 வரை பின்பற்றவேண்டியவை எது?
*நாடு முழுவதும் பொது இடங்களிலும் அலுவலகங்களிலும் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம்.
*மே 3ம் தேதி வரை அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத்தலங்கள், பொதுக்கூட்டங்களுக்கு தடை தொடரும்
*விமானம், ரயில், சாலை போக்குவரத்து ஒட்டு மொத்தமாக நிறுத்தப்படும். அனைத்து கல்வி நிலையங்கள், பொதுப் போக்குவரத்து சேவைகள் இயங்க தடை நீடிக்கிறது.
*மாநிலங்களுக்கிடையே, மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து கிடையாது. மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
*பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்க மத்திய அரசு உத்தரவு.5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட கூடாது.
*சிறப்பு அனுமதி பெற்றப்பட்ட நிறுவனங்களை தவிர்த்து, பிற தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கக்கூடாது
*ஆட்டோ உள்ளிட்ட டாக்சி சேவைகள் இயங்கக்கூடாது
*மால்கள், தியேட்டர்கள், ஜிம், நீச்சல் குளம், கேளிக்கை பூங்கா, பார்கள் , மண்டபங்கள் மூடப்பட வேண்டும்
*திருவிழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது
*இறுதி சடங்கில் கலந்துகொள்ள 20 பேருக்கு மேல் அனுமதி கிடையாது. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏப்ரல் 20க்கு பிறகு எவை இயங்கும் ?
*அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசு அலுவலகங்கள் மட்டும் இயங்க அனுமதி.அரசுக் கருவூலம், தலைமைக் கணக்காயர் அலுவலகம் செயல்பட அனுமதி.
*துறைமுகங்கள், விமான நிலையங்களில் சுங்கத்துறை அலுவலகங்கள் இயங்க அனுமதி.மின்சாரம், குடிநீர்,துப்புரவுப் பணி மற்றும் குறைந்த ஊழியர்களுடன் நகராட்சி அலுவலகம் செயல்படலாம்.
* உயிரியல் பூங்காக்கள், நர்சரிகள், தாவரங்கள் பராமரிப்பு பணிக்கான ஊழியர்கள் பணியாற்ற அனுமதி.
*அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி. சரக்குகளை ஏற்றிச் செல்லவும், நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லவும் விமானம், ரயில்கள் இயக்கப்படும்.
*50% பணியாளர்களுடன் டீ, காபி, ரப்பர் தோட்டங்களில் பணிகளை செய்யலாம்.
*பால் கொள்முதல், விற்பனை உள்ளிட்ட பணிகளை தொடரலாம்.
*பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைனில் பாடம் நடத்தலாம்
*தபால் நிலையங்கள், பெட்ரோல்பங்க்குகள் உள்ளிட்டவை இயங்கும்
*ஏப்ரல் 20ம் தேதிக்குப் பின் நெடுஞ்சாலைகளில் உள்ள தாபாக்கள் சமூக இடைவெளியுடன் இயங்க அனுமதி.லாரிகள் பழுதுபார்க்கும் பட்டறைகள் இயங்க அனுமதி.
*ஏப்ரல் 20 முதல் மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பால் நிலையங்கள், இறைச்சிக்கடைகள் செயல்பட அனுமதி.நெடுஞ்சாலையோர ஓட்டல்களை திறக்க அனுமதி
*தனியார் வாகனங்கள் இயங்க மாநில அரசின் அனுமதி பெற்றே இயங்க வேண்டும். அதுவும் இரு சக்கர வாகனத்தில் ஒருவர் மட்டும் செல்ல வேண்டும். நான்கு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும்.
*சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்படும் தொழிற்சாலைகள் 20ந் தேதி முதல் இயங்க மத்திய அரசு அனுமதி
*ஏப்.20 முதல் அரசு நடவடிக்கைகளுக்கான கால் சென்டர் மையங்களை திறக்கலாம்.கனரக வாகன பழுது பார்ப்பு கடைகளை திறக்க அனுமதி
*வரும் 20ந் தேதிக்கு பிறகு மக்கள் நெருக்கம் குறைவான தொலைதூரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதி
*கட்டுமானப்பணிகள் நடைபெறவும் மத்திய அரசு அனுமதி.
*வேளாண் தொடர்புடைய அனைத்து பணிகளையும் தொடங்க அனுமதி.
*ஏப்ரல் 20 முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி.
*விவசாயம் சார்ந்த இயந்திர நிறுவனங்கள், பழுது நீக்கும் நிறுவனங்கள் செயல்பட அனுமதி
*ஏப்ரல் 20ல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம்; ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
*உணவு, மருந்துகளை இணைய வர்த்தக நிறுவனங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்கலாம்.
*மீன், இறைச்சி கடைகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு. வங்கிகள், ஏ.டி.எம்கள், காப்பீட்டுத் துறைகள் இயங்கும். மீன் பிடித்தல், மீன் சார்ந்த பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல அனுமதி.
*ஏப்ரல் 20-க்கு பிறகு 100 நாள் வேலைத்திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி.முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற அனுமதி
*.ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சுவேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோர் செயல்பட அனுமதி.
*50 சதவீத ஊழியர்களுடன் ஐ.டி. நிறுவனங்கள் இயங்க அனுமதி அளித்துள்ளது மத்தஅமைச்சகம்.
*தொற்று அதிகமுள்ள பகுதிகள், கட்டுப்படுத்துதல் பகுதியாக மாற்றி சீல் வைக்கப்படும்.சீல் வைக்கப்படும் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறவும், உள்ளே வரவும் தடை.
*ஏப்ரல் 20ம் தேதி முதல் சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம்.
*ஊரகப் பகுதியில் தொழில் நிறுவனங்கள் இயங்கலாம். ஊரகப் பகுதியில் உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் இயங்கலாம்.ஊரகப் பகுதியில் சிறு, குறு தொழில் சார்ந்த கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள், பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததற்காக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு தளர்வு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.