• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ 7,500 நிவாரணம் வழங்கு சிபிஎம் ஆர்ப்பாட்டம்

June 16, 2020 தண்டோரா குழு

கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி அகில இந்திய எதிர்ப்பு தினத்தை அனுசரிக்க சிபிஎம் மத்தியகுழு அறைகூவல் விடுத்தது. இதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டன இயக்கங்களில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக கோவை காந்திபுரம் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார்.

மத்திய அரசு சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு நிபந்தனையற்ற கடன் வழங்க வேண்டும். நூறு நாள் கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டும், ஊரடங்கு காலத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் மின் கட்டணம் மிக அதிகமாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது மக்களை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு உடனடியாக மின் கணக்கீட்டு குளருபடிகளை சரிசெய்து நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க