• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஊட்டி மலை ரயில் தனியார் வசமானதா? – தெற்கு ரயில்வே நிர்வாக விளக்கம்

December 7, 2020 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் நீராவி மலை ரயில் தனியாருக்கு கொடுக்கப்பட்டதாகவும், கட்டணம் கடுமையாக உயர்ந்ததாகவும் தகவல் வெளியானது. இதனால், பொதுமக்கள் பலரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சென்று வர சாதாரண நாட்களில் அதிகபட்சமாக ரூ.475 ஆக இருந்த நிலையில், தற்போது நபர் ஒருவருக்கு ரூ.2,500 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக டிக்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், உதகை சிறப்பு மலை ரயிலை தனியாரிடம் தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.ஊட்டி மலை ரயிலை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என சுற்றுலா பயணிகளும், உள்ளூர்வாசிகளும் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், இதனை தெற்கு ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நீலகிரி மலை இரயில் ( Nilgiris Mountain Railway-NMR) தனியார் வசமானது என்பது தவறான பதிவு. ரயில்வே துறையின் பாலிசி படி எந்த ஒரு தனி நபர் வேண்டுமானாலும் ஒரு ரெயிலையோ ஒரு இரயில் பெட்டியை full tariff rate (FTR ) என்ற முறையில் ஒரு குழுவிற்கு அல்லது சுற்றுலா ஏற்பாடு செய்வதற்காக அல்லது திருமண நிகிழ்ச்சிகாக பணம் செலுத்தினால் ரயில்வே துறை அவர்களுக்கு ஒரு ரெயிலை அல்லது ஒரு இரயில் பெட்டியை இயக்கும். இது chartered trip என்றும் அழைக்கப்படும். இதற்கு முன்பு ரயில்வே இது போல் பல chartered trip களை இயக்கி உள்ளது.

அத்தகைய chartered trip முறையிலேயே இந்த பயணம் டிசம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் தனியார் நிறுவனத்தின் விண்ணப்பத்தின் படி இயக்கப்பட்டது. இதை NMR தனியார் மயமாக்கப்பட்டு விட்டது என கூறுவது முற்றிலும் தவறான புரிதல் இல்லாத இடபட்ட பதிவு ஆகும். இந்த ஒரு chartered trip க்கும் இரயில்வேயின் வழக்கமான NMR சேவைக்கும் சம்பந்தம் இல்லை.

இரயில்வேயின் வழக்கமான சேவைகள் கோவிட்-19 ஐ கருத்தில் கொண்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டு உள்ளது. இதை இயக்க உரிய அனுமதி வந்த பிறகு பொது மக்களுக்காக ஏற்கனவே இருந்த கட்டணத்தின் அடிப்படையில் இயக்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க