• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உ.பி யில் சிங்கம் புலிகளுக்கு மாட்டிறைச்சி கிடையாது புதிய அரசு அதிரடி

March 25, 2017 தண்டோரா குழு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க. அரசு இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை மற்றும் இறைச்சி வெட்டும் ஆலைகளை மூட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 325 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை மற்றும் இறைச்சி வெட்டும் ஆலைகளை மூட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் கான்பூர் உயிரியில் பூங்காவில் உள்ள விலங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

லக்னோ மிருகக்காட்சிசாலையில் இருக்கும் விலங்குகளுக்கு ஒரு நாளுக்கு 235 கிலோ மாட்டு இறைச்சி உணவாக அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த இரு தினங்களாக வெறும் 80 கிலோ இறைச்சி தான் வழங்கப்படுவதாகவும் இதனால் சிங்கங்களும் புலிகளும் மட்டுமின்றி சிறுத்தை, கழுதைப்புலி, ஓநாய்கள் மற்றும் குள்ள நரி, போன்ற மிருகங்களும் பாதிக்கப்படுவதாகவும்
எட்டாவா லயன் சபாரி மிருகக்காட்சி சாலை துணை இயக்குனர் அனில் படேல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அங்கிருக்கும் மிருகங்களுக்கு உணவில் எருமை இறைச்சி பயன்படுத்தப்படுவதற்கு மாறாக ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி கொடுக்கப்பட்டு வருகிறது. ஆட்சி மாற்றத்தால் உ.பி சிங்கங்களும் தங்களின் உணவை மாற்றிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள நான்கு பூங்காக்கள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க