• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உ.பி மாநிலத்தில் மணமகனுக்கு 11 ரூபாயை கொடுத்து விசித்திர திருமணம்

December 13, 2016 தண்டோரா குழு

உத்திரபிரதேசத்தில் பண தட்டுப்பாடால், ஒரு குடும்பத்தினர் மணமகனுக்கு 11 ரூபாயை கொடுத்து விசித்திரமான முறையில் திருமணத்தை நடத்தியுள்ளனர்.

நவம்பர் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 5௦௦ மற்றும் 1,௦௦௦ ரூபாய் செல்லாது என்ற அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் பணத்தட்டுபாடு ஏற்பட்டது. இதனால், வடஇந்தியாவின் உத்திரபிரதேஷம் மாநிலம் கிரேட் நொய்டாவை அடுத்துள்ள நட்டோகி மதியா என்ற கிராமத்தை சேர்ந்த மகாவீர் சிங்க், ஞானோ தம்பதியினரின் தங்கள் மகள் சன்சுவின் திருமணத்தை நடத்த முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியிருந்தனர்.

இந்நிலையில், லாரி ஓட்டுனரான யோகேஷ் எளிமையான முறையில் சன்சுவை திருமணம் செய்ய முன்வந்தார். இதையெடுத்து, யோகேஷ் சன்சு தம்பதியினர் மாலை மாற்றி திருமணம் செய்துக்கொண்டனர். அவர்களுடைய திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினருக்கு வெறும் டீ மட்டுமே வழங்கபட்டது.

மேலும், வரதட்சணையாக 11 ரூபாயை பெற்றுக்கொண்டு மனைவியை அழைத்துச் சென்றார் யோகேஷ். இவர்களின் நிலையை பார்த்த அந்த கிராமத்தின் இளைஞர்கள் தங்கள் சொந்த செலவில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து புது தம்பதியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்

மேலும் படிக்க