• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உ.பியில் தலைவர்களின் பிறப்பு இறப்பு தினங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது

April 14, 2017 தண்டோரா குழு

உ.பியில் தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாளின் போது பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது என்று உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

உ.பியில் நடந்த அம்பேத்கரின் 126 பிறந்தநாள் விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய யோகி ஆதித்யநாத்,

“ நாட்டின் தலைவர்களை நினைவு கூறும் முக்கிய தினங்களில் விடுமுறை விடப்படுவதால் குறிப்பிட்ட தலைவர்களை பற்றி மாணவர்களுக்கு தெரியாமலே போய்விடுகிறது. இதுமட்டுமின்றி, ஏன் விடுமுறை விடுகிறார்கள் என்பதுகூட மாணவர்களுக்கு புரிவதில்லை. ஆகையால் விடுமுறைக்கு பதிலாக குறிப்பிட்ட தலைவர்களின் சிறப்பை மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.

மேலும், வருடத்திற்கு குறைந்தது 220 நாட்களுக்கு பள்ளிகள் செயல்பட வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால், இப்படி அடிக்கடி விடுமுறை விடப்படுவதால் ஆண்டுக்கு 130 முதல் 140 நாட்கள் வரைதான் பள்ளிகள் செயல்படுகிறது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே, இனிவரும் நாட்களில் தலைவர்களின் பிறப்பு மற்றும் இறப்பு தினங்களுக்கு பள்ளிகளில் விடுமுறை கிடையாது ” என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

மேலும் படிக்க