September 29, 2018
தண்டோரா குழு
உத்தரப்பிரதேசத்தில் ஆப்பிள் ஸ்டோர் மேலாளர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் இரு காவலர்கள் மீது கொலை வழக்குப் பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கோமதிநகர் எக்ஸ்டென்சன் பகுதியில் நேற்று நள்ளிரவு மீரட் காவல்துறையைச் சேர்ந்த இரு காவலர்களால் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக எஸ்யுவி ரக காரில் சக பெண் பணியாளருடன் வந்த விவேக் திவாரி என்ற ஆப்பிள் ஸ்டோர் மேலாளர் வந்துள்ளார். அவரது வாகனத்தை போலீசார் தடுத்துள்ளனர். ஆனால், அவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது. அதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரது வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த விவேக் திவாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைடுத்து, தன் மீது 3 முறை காரை ஏற்றி கொல்ல முயன்றதால் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதாகவும், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதும் தாங்கள் தான் எனவும் கைதான காவலர்களில் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.