• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உள்ளாட்சி தேர்தலில் அதிமுவிற்கு ஆதரவு – விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பு

December 23, 2019

கோவையில் நடைபெற்ற அனைத்து விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் தமிழக அரசின் எதிர்வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு முழு ஆதரவினை தெரிவித்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவையில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விஸ்வபிரம்ம ஜெகத் குரு சிவசண்முகசுந்தர பாபுஜி சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு விருந்தினராக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுனன் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் தமிழகத்தில் பாரம்பரியமாக தங்க நகை தொழில் செய்யும் விஸ்வகாம சமூக பொற்கொல்லர்கட்கு சில ஆண்டுகளாகவே வேலை வாய்ப்பு நலிவடைந்து உள்ளதை சரி செய்யும் பொருட்டும் , தங்க நகை மொத்த வியாபாரிகள் , நகைக்கடை அதிபர்கள் அனைவரும் எண்பது சதவீத வேலை வாய்ப்பினை உள்ளுர் பொற்கொல்லர்களுக்கு வழங்க , அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ளதை போல தமிழகத்திலும் பாரம்பரிய பொற்கொல்லர்களுக்கு “ தமிழ்நாடு விஸ்வகர்ம கூட்டுறவு இணையம் ” என்ற அமைப்பை உருவாக்கி அதில் நலிவடைந்தவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி கொடுத்து உதவ வேண்டும், தமிழக அரசு மற்றும் மற்றும் அதன் சார்புடைய வங்கிகளில் தங்க நகைகளை மதிப்பீடு செய்ய பாரம்பரிய பொற்கொல்லர்களை நியமிப்பதுடன் , ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு நிரந்தர பணி நியமன ஆணை பிறப்பிக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் கள் ரமேஷ்,திருக்குமார் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விஸ்வகர்மா சமூக மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க