August 6, 2018
தண்டோரா குழு
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்றம் செல்லவுள்ளதால், உள்ளாட்சித் தேர்தல் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், உள்ளாட்சி தேர்தலை 2017-ம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு உத்தரவிட்டனர். ஆனால், இந்த உத்தரவை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் ஆகியோர் அமல்படுத்தவில்லை. இதையடுத்து அதிகாரிகள் மீது தி.மு.க. சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, மற்றும் நீதிபதி எம். சுந்தர் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் எம். சுந்தர் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த உள்ளாட்சித் தேர்தல் வழக்கு. நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சுந்தர் அமர்வுக்கு மாற்றப்பட்டது.