• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உள்ளாடை போல் இதுவும் ஒரு ஆடை – நாப்கினை துவைத்து மீண்டும் பயன்படுத்தலாம் !

May 31, 2020 தண்டோரா குழு

நாப்கின் நமக்கு அறிமுகம் ஆகாத காலகட்டத்தில் நம் பெண்கள் மாதவிடாயின் போது பருத்தித் துணியை பயன்படுத்தி வந்தார்கள். சிலர் துவைத்து பயன்படுத்துவார்கள். சிலர் எரிப்பார்கள்.சிலர் துணியை புதைத்து விடுவார்கள்.அப்போது கருப்பை தொடர்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அந்த வசந்த காலத்தில் நம் பெண்கள் பத்து பதினைந்து குழந்தைகளை பெற்றுக் கொண்டார்கள். ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். துணியை பயன்படுத்திய காலத்தில் பெண்களுக்கு கருப்பை பிரச்சனை வந்ததா,? அல்லது நாப்கின் பயன்படுத்தும் இந்த காலத்தில் பெண்களுக்கு கருப்பப்பை பிரச்சனை வந்ததா? என்கின்ற கேள்வியோடு அதற்கான பதிலை தேடி இருக்கிறார் கோவையைச் சேர்ந்த இஷானா.

இது அவர் கூறும்போது,

நாங்கள் உருவாக்கும் நாப்கினில் லீக் புரூப் வைப்பதில்லை. லீக் புரூப் வைத்தாலும் அதில் பிளாஸ்டிக் தன்மையை இணைக்க வேண்டும். எக்கோ ஃபிரண்ட்லியாக இருக்காது.மாதவிடாய் காலத்தில் மூன்று நாட்கள் என்று கணக்கிட்டால் ஒரு பெண் குறைந்தபட்சம் 10 நாப்கின்களை பயன்படுத்த வேண்டியிருக்கும்.அப்போது வருடத்திற்கு கணக்கிட்டுப் பாருங்கள் அதில் அவர்கள் பாதியளவாவது குறைக்கவேண்டும் என்று நாங்கள் உழைத்து வருகிறோம். பிளாஸ்டிக்கால் நம் சுற்றுப்புற சூழல் வீணாவதை தடுக்க வேண்டும் அதற்காக தான் எங்களால் முடிந்த அளவு இந்த நாப்கின்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் செய்வது புதுமை அல்ல ஆனால் ஏற்கனவே செய்து கொண்டிருப்பவர்களும் தற்போது புதிதாக வந்திருக்கும் எங்களை மக்கள் விரைவில் திரும்பி பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் இயக்கிக் கொண்டு இருக்கிறோம் என்றார் இஷானா.

மேலும் கூறும்போது துணி போல் எங்கும் எடுத்துச் செல்லலாம் மறைக்க வேண்டியதில்லை பள்ளி,கல்லூரி மாணவிகள், பெண்கள் அனைவரும் பயன்படுத்தி சுகாதாரமாக இருக்கலாம்.சுற்றுச்சூழலும் மாசுபடாது என்றார். தற்போது ஒரு சிறிய முயற்சி எடுத்து இருக்கிறோம் இதில் யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கிறதோ அவர்களுக்கு கற்றுத் தரவும் தயாராக இருக்கிறோம். இந்த பூமி நம்முடையது. அதன் சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதற்கு சுயநலமாக இருப்பதில் தப்பில்லை என்று கூறும் இஷானாவிற்கு,அடுத்து ஆறு மாதத்துக்குள் தனது துறையில் 100 தொழில்முனைவோரை உருவாக்க வேண்டும் என்றார்.

மேலும் படிக்க