• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உளவுத்துறை தகவலை அடுத்து கோவையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு

March 16, 2020 தண்டோரா குழு

உளவுத்துறை தகவலை அடுத்து கோவையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் கோவையில் கடந்த ஒரு மாதமாக ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஆனந்த், ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் சூர்யபிரகாஷ், எஸ்.டி.பி.ஐ. பிரமுகர் சாகுல் ஹமீத் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், கோவை இந்து முன்னணி அலுவலகம் மற்றும் பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் நடந்தன. இதனால் கோவை மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

இந்நிலையில், கேரளாவில் இருந்து ஒரு கும்பல் கோவைக்குள் ஊடியிருப்பதாகவும், அவர்கள் கோவையில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத்துறை மூலம் கோவை மாநகர போலீசாருக்கும், கோவை மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து, போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் தலைமையில் ஆயிரம் போலீசாரும், காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையில் ஆயிரத்து 100 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் சி.ஆர்.பி.எப். போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

மேலும், கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் 12 வழித்தடங்களிலும் செக் போஸ்ட் அமைக்கப்பட்டு அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், கோவையில் மேலும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

மேலும் படிக்க